Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

தேசியப்பட்டியல் எம்பியாக முஜிபுர் ரஹ்மான்: வர்த்தமானி வெளியானது!

T

The Leader Desk

மே 9, 2024 • 2:42 PM

தேசியப்பட்டியல் எம்பியாக முஜிபுர் ரஹ்மான்: வர்த்தமானி வெளியானது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேசியப் பட்டியல் பதவிக்கு முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • சமகி ஜனபலவேகவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் நேற்று (08 ) முதல் நீக்கப்பட்டுள்ளது.
  • வெற்றிடமாகவுள்ள உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பெயரை முன்மொழிந்து அனுப்புமாறு ஐக்கிய மக்கள் சக்தியிடம் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
எழுத்து அளவு:

தேசியப் பட்டியல் பதவிக்கு முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சமகி ஜனபலவேகவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் நேற்று (08 ) முதல் நீக்கப்பட்டுள்ளது.
 

>இதன் காரணமாக பாராளுமன்றத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

 

வெற்றிடமாகவுள்ள உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பெயரை முன்மொழிந்து அனுப்புமாறு ஐக்கிய மக்கள் சக்தியிடம் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இதன்படி, குறித்த தரப்பினரால் பெயர் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாகவும், குறித்த பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்ததன் பின்னர், பெயர் குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை உறுப்பினர் பதவிக்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டதற்கான வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...