Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ரொஷான் குமார கொலையுடன் தொடர்புடையவர் விமான நிலையத்தில் கைது!

T

The Leader Desk

மே 7, 2024 • 5:48 AM

ரொஷான் குமார கொலையுடன் தொடர்புடையவர் விமான நிலையத்தில் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரொஷான் குமார சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உட்பட பல கொலைகளுக்காக பொலிஸ் விசாரணைக்கு தேடப்பட்ட எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் டுபாய் செல்வதற்காக வேறு பெயரில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.
  • இவர் எல்பிட்டிய கரந்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடையவர்.
  • போலி ஆவணம் மூலம் பெயர் மாற்றி போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி டுபாய்க்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது தானியங்கி முக அடையாளம் காணும் முறைமை மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
எழுத்து அளவு:

ரொஷான் குமார சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்  உட்பட பல கொலைகளுக்காக பொலிஸ் விசாரணைக்கு தேடப்பட்ட எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த  ஒருவர்  டுபாய் செல்வதற்காக வேறு பெயரில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.

போலி ஆவணம் மூலம் பெயர் மாற்றி போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி டுபாய்க்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது தானியங்கி முக அடையாளம் காணும் முறைமை மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
 
இவர் எல்பிட்டிய கரந்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடையவர்.
 
நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்காக மதுரவகே  டில்ஷான் மதுசங்க டி சில்வா என்ற போலிப் பெயரில் போலி கடவுச்சீட்டை தயார் செய்துள்ளார்.
 
இவர் முன்னர் இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றி விட்டு வெளியேறினார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ரொஷான் குமார கொலையுடன் தொடர்புடையவர் விமான நிலையத்தில் கைது! | Tamil Leader | We Lead the Nation