Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

துபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட மன்னா ரமேஷ்!

T

The Leader Desk

மே 7, 2024 • 3:57 AM

துபாயிலிருந்து அழைத்து  வரப்பட்ட மன்னா ரமேஷ்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் 'மன்னா ரமேஷ்' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக நபரான ரமேஷ் பிரிய ஜனக கைது செய்யப்பட்டதாக இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததது.
  • 'மன்னா ரமேஷ்' அவிசாவளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல கொலைகள் உட்பட பல குற்றங்களுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவராவார்.
  • இதனையடுத்து தேடப்பட்டு வந்த குற்றவாளியை இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு துபாய் பொலிஸாரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டு அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் வருவதற்காக பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எழுத்து அளவு:

மன்னா ரமேஷ் என அழைக்கப்படும் ரமேஷ் பிரிய ஜனக, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (07) காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

இந்த நபருடன்  சிஐடி அதிகாரிகள் அடங்கிய விசேட குழு இன்று (07) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை  வந்தடைந்ததாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் 'மன்னா ரமேஷ்' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக நபரான ரமேஷ் பிரிய ஜனக கைது செய்யப்பட்டதாக இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததது.

இதனையடுத்து தேடப்பட்டு வந்த குற்றவாளியை இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு துபாய் பொலிஸாரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டு  அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் வருவதற்காக பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டது.

'மன்னா ரமேஷ்'  அவிசாவளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல கொலைகள் உட்பட பல குற்றங்களுக்காக  பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவராவார்.

மன்னா ரமேஷிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

துபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட மன்னா ரமேஷ்! | Tamil Leader | We Lead the Nation