Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

சரத் பொன்சேகாவுக்கு எதிரான வழக்கை பரிசீலிக்க திகதி குறிக்கப்பட்டது!

T

The Leader Desk

மே 6, 2024 • 9:48 AM

சரத் பொன்சேகாவுக்கு எதிரான வழக்கை பரிசீலிக்க திகதி குறிக்கப்பட்டது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உறுப்புரிமை மற்றும் அவர் வகிக்கும் பதவிகளிலிருந்து அவரை நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்த சீராய்வு மனுவை பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
  • இந்த மனு இன்று (06) அழைக்கப்பட்டபோது எதிர்வரும் 21 ஆம் திகதி இந்த மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி.
  • ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட குழுவினால் இந்த சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

உறுப்புரிமை மற்றும் அவர் வகிக்கும் பதவிகளிலிருந்து அவரை நீக்குவதற்கு  கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி  ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்த சீராய்வு மனுவை பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

இந்த மனு இன்று (06) அழைக்கப்பட்டபோது எதிர்வரும் 21 ஆம் திகதி இந்த மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி. என். சமரகோன் உத்தரவிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட குழுவினால் இந்த சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி ஒருவரை இணைத்துக் கொண்டமை தொடர்பில் தாம் வழங்கிய அறிக்கையின் பின்னர் தன்னைக் கட்சி அங்கத்துவம் மற்றும் கட்சியில்  தான்  வகிக்கும் பதவிகளிலிருந்து  நீக்குவதற்கு  ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர்கள் தயாராகி வருவதாக சரத் பொன்சேகா மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே  நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை மற்றும் அவர் வகிக்கும் பதவிகளில் இருந்து அவரை நீக்குவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்ட  நிலையிலேயே இந்த தீர்ப்பை மீளாய்வு செய்து  சரத் பொன்சேகா பெற்றுள்ள தடை உத்தரவுகளை இடைநிறுத்தி உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இந்த மீளாய்வு மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...