Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து நாளை பரீட்சைக்குத் தோற்றலாமா?

T

The Leader Desk

மே 5, 2024 • 2:34 PM

முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து நாளை  பரீட்சைக்குத் தோற்றலாமா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஹிஜாப் அணிந்து செல்வோர் முகம் மற்றும் காதுகள் விளங்கும் வகையில் ஹிஜாப் அணிந்த செல்வது போதுமானது . இதனை பரீட்சை திணைக்களமும், கல்வி அமைச்சும் உறுதிப்படுத்தியிருப்பதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.
  • அமீன் இரு தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலே தெரிவித்துள்ளார். ஹிஜாபினை அணிந்து செல்வோர் எவ்வித அச்சமும் இன்றி இந்த ஆலோசனைகளை பின்பற்றி பரீட்சை மண்டபத்துக்கு செல்லுமாறு கேட்கப்படுகிறார்கள்.
  • ஆசிரியர்களும் பெற்றோர்களும் பரீட்சைக்கு தோற்றும் மாணவிகளுக்கு இது தொடர்பான ஆலோசனைகளை வழங்கி பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்குமாறும் வேண்டப்படுகிறீர்கள்.
எழுத்து அளவு:

தோற்றும் முஸ்லிம் மாணவிகள்  ஹிஜாப் அணிந்து தோற்றுவதற்கு எவ்வித தடையும் இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது. 

ஹிஜாப்  அணிந்து பரீட்சைக்கு தோற்ற முடியாதென பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தே  முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் இவ்வாறு தெரிவித்துள்ளது. 
 
முஸ்லிம் கவுன்சில் சார்பில் அதன் தலைவர் என். எம். அமீன் விடுத்துள்ள அறிக்கையில் இது பற்றி விளக்கப்பட்டுள்ளது. 
 
பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவிகள் தங்களது முகம் மற்றும் இரு காதுகள் விளங்கும் வகையில் ஹிஜாபை அணிந்து செல்ல வேண்டும் என பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
 பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகளிடம் ஹிஜாபை அகற்றிச் செல்ல வேண்டும் என பரப்பப்படும் வதந்திகளில் உண்மை இல்லை . ஹிஜாப் அணிந்து செல்வோர் முகம் மற்றும் காதுகள் விளங்கும் வகையில் ஹிஜாப் அணிந்த செல்வது போதுமானது . 
 
இதனை பரீட்சை திணைக்களமும், கல்வி அமைச்சும் உறுதிப்படுத்தியிருப்பதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என். எம். அமீன் இரு தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலே தெரிவித்துள்ளார். 
 
ஹிஜாபினை அணிந்து செல்வோர் எவ்வித அச்சமும் இன்றி இந்த ஆலோசனைகளை பின்பற்றி பரீட்சை மண்டபத்துக்கு செல்லுமாறு கேட்கப்படுகிறார்கள். ஆசிரியர்களும் பெற்றோர்களும் பரீட்சைக்கு தோற்றும் மாணவிகளுக்கு இது தொடர்பான ஆலோசனைகளை வழங்கி பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்குமாறும் வேண்டப்படுகிறீர்கள்.
 
சில சக்திகள் பரீட்சைக்கு முதலாவதாக தோற்றும் மாணவிகள் மத்தியிலே பிரச்சினைகளை தோற்றுவிப்பற்காக இவ்வாறான வதந்திகளை பரப்புகின்றனரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 
 
எனவே போலி வதந்திகளை நம்பாமல் துணிச்சலோடு பரீட்சைக்கு தோற்றுமாறு சகல முஸ்லிம் மாணவிகளையும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...