Tamil Leader News
முக்கியம்
இந்திய சினிமாவையே தலைகீழாக மாற்றிய ‘ராமாயணம்’ உலகம் முழுவதும் திரைக்கு!●ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலை மீண்டும் அதிகரிப்பு: வித்தியாசம் ரூ. 25!●நாட்டை விட்டு இளைஞர்கள் வெளியேறும் அவலம்!●தெற்கு கடலில் சோதனை: ரூ. 3 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் சிக்கின!●தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●
செய்திகள்

பெரும் இலாபத்தில் 'புத்தி கெட்ட மனிதர் எல்லாம்' திரைப்படம்

T

The Leader Desk

ஜனவரி 6, 2023 • 2:32 PM

பெரும் இலாபத்தில் 'புத்தி கெட்ட மனிதர் எல்லாம்' திரைப்படம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலாபத்தை ஈட்டி தந்துள்ளதாக அத்திரைப்படத்தின் இயக்குனர் ராஜ் சிவராஜ் தெரிவித்தார்.
  • அதில் பலதை ஏற்றுக்கொண்டுள்ளேன்.
  • பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில், யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக இன்றையதினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:

இலாபத்தை ஈட்டி தந்துள்ளதாக அத்திரைப்படத்தின் இயக்குனர் ராஜ் சிவராஜ் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில், யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக இன்றையதினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஈழ சினிமா ஊடாக வருமானத்தை ஈட்ட முடியாது என பலரும் கருத்துக்களை முன் வைத்து வரும் நிலையில் , கடந்த வருடம் எம்மால் வெளியிடப்பட்ட "புத்தி கெட்ட மனிதர்கள் எல்லாம்" திரைப்படம் பெரும் இலாபத்தை ஈட்டி தந்துள்ளது.

மிக குறைந்த செலவில் திரைப்படத்தை எடுத்து , திரைக்கு கொண்டு வந்து , இன்றைய நிலையில் அது எமக்கு பெரும் இலாபத்தை ஈட்டி தந்துள்ளது.

எமக்கான சந்தை திறந்தே உள்ளது. நாம் யாருக்காக படம் எடுக்கிறோம். அதனை எப்படி கொடுக்கிறோம் என்பதில் எமது வெற்றி உள்ளது.

புத்திகெட்ட மனிதர் எல்லாம் திரைப்படம் தொடர்பில் எதிர் மறையான விமர்சனங்கள் பல என்னிடம் தனிப்பட்ட முறையில் பலர் முன் வைத்து இருந்தனர். அதில் பலதை ஏற்றுக்கொண்டுள்ளேன். எனக்கும் எமது படத்தில் பல குறைகள் இருப்பது தெரியும். கிடைக்கப்பெறுகிற வளத்தில் என்ன செய்ய முடியமா அதனை விட அதிகமாகவே கொடுத்துள்ளோம் என நம்புகிறேன்.

எமது கதைகளை எந்த சமரசமும் இன்றி திரையில் வெளி கொணர வேண்டும். அதற்காக எனது உழைப்பு நிச்சயம் இருக்கும்.

அதற்கு முதல் என்னை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனூடாக எனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு , எம் கதைகளை எந்த சமரசமும் இன்றி, " இது தான் எங்கள் கதைகள்" என திரைக்கு நிச்சயம் கொண்டு வருவேன் என்றார்.

யாழ் சர்வதேச திரைப்பட விழா யாழ்ப்பாணம் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்று வரும் நிலையில், இலங்கை சினிமா நேற்று இன்று நாளை என்ற தலைப்பிலான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளை சார்ந்த சினிமா இயக்குனர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிபிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...