Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

'காணாமல்போனோர் விவகாரத்தைச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கையாளும்'; அரசாங்கம் அறிவிப்பு

T

The Leader Desk

டிசம்பர் 15, 2022 • 4:08 AM

'காணாமல்போனோர் விவகாரத்தைச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கையாளும்'; அரசாங்கம் அறிவிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாதிக்கப்பட்டவர்களுடன் நடுநிலைத் தரப்பாக நேரடியாக ஊடாடி விடயங்களைக் கையாள்வதற்கென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவையைப் பெறுவதற்கு அரசின் உயர்மட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அறியவருகின்றது.
  • இதேநேரம் இந்த விடயம் ஐ.நா.
  • செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் பணியை மீண்டும் இலங்கையில் விஸ்தரிப்பதற்கான பச்சைக் கொடியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா காண்பித்துள்ளார்.
எழுத்து அளவு:

பாதிக்கப்பட்டவர்களுடன் நடுநிலைத் தரப்பாக நேரடியாக ஊடாடி விடயங்களைக் கையாள்வதற்கென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவையைப் பெறுவதற்கு அரசின் உயர்மட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அறியவருகின்றது.

செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் பணியை மீண்டும் இலங்கையில் விஸ்தரிப்பதற்கான பச்சைக் கொடியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா காண்பித்துள்ளார்.

இலங்கையில் காணாமல்போனோர் விவகாரம் பெரும் பூதாகாரமாகவே இருக்கும் நிலையில், அதனை சர்வதேச ஒத்துழைப்புடன் மட்டுமே ஒரு தீர்வை நோக்கி முன்கொண்டு செல்ல முடியும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.

இதேநேரம் இந்த விடயம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வுகளிலும் தொடர்ச்சியாக முன் வைக்கப்படும் பாரிய மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டாக இருப்பதோடு, தற்போது ரணில் அரசுடனான பேச்சுகளின் போது தமிழ்க் கட்சிகள் மிகவும் இறுக்கமான விடயமாக அதனை முன்கொண்டு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

இவற்றின் காரணமாக இலங்கையில் போர் இடம்பெற்ற காலத்தில் போர்முனையில் செயற்பட்ட நடுநிலைத் தொண்டு நிறுவனங்களில் ஒன்றான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை இலங்கையில் அதன் செயற்பாடுகளை மீளவும் விரிவுபடுத்த அனுமதி வழங்கிஇ அதன் மூலம் காணாமல்போனோர் பதிவை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது எனத் தெரிகின்றது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...