Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவரின் செயற்பாடுகள் குறித்து வெளிப்படுத்திய கஞ்சன

T

The Leader Desk

டிசம்பர் 7, 2022 • 1:41 PM

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவரின் செயற்பாடுகள் குறித்து வெளிப்படுத்திய கஞ்சன

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • 'பொதுமக்களுக்குத் தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டுமென்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்.
  • எவ்வாறெனினும், மின் கட்டணத்தை அதிகரிக்காவிடின், அடுத்தாண்டு முதல் நாளொன்றுக்கு 6 முதல் 8 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த வேண்டி ஏற்படும்.
  • 'ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்ய 57.90 ரூபாய் செலவாகுமாயின், அந்த ஒரு அலகுக்கு 57.90 ரூபாயையே அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் அறவிட வேண்டும்.
எழுத்து அளவு:

ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, தொடர்மாடிகள் மற்றும் ஹோட்டல் கட்டமைப்புகளுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவதோடு, ஏனைய இடங்களுக்கு அதிக விலையில் மின்சாரத்தை விநியோகித்து வரும் முறைமை தொடர்பில் இன்னும் சில தினங்களில் தான் வெளிப்படுத்துவதாக, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

'பொதுமக்களுக்குத் தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டுமென்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும். அவ்வாறு மின்சாரத்தை வழங்க வேண்டுமென்றால், கட்டண மீள்திருத்தமொன்று அவசியம்.

'பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவானது சில இடங்களில் நடந்துகொண்ட விதம் தொடர்பில், எதிர்காலத்தில் வெளிப்படுத்துவேன். எவ்வாறெனினும், மின் கட்டணத்தை அதிகரிக்காவிடின், அடுத்தாண்டு முதல் நாளொன்றுக்கு 6 முதல் 8 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த வேண்டி ஏற்படும்.

'ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்ய 57.90 ரூபாய் செலவாகுமாயின், அந்த ஒரு அலகுக்கு 57.90 ரூபாயையே அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் அறவிட வேண்டும். எந்தவொரு பாகுபாடுமின்றி இந்தக் கட்டணம் அறவிடப்படல் வேண்டும்' என்று, அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...