Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

டயனா கமேகேவின் குடியுரிமை தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு

T

The Leader Desk

நவம்பர் 28, 2022 • 9:28 AM

டயனா கமேகேவின் குடியுரிமை தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(28) அனுமதி வழங்கியுள்ளது.
  • பிரித்தானிய பிரஜையான டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என தீர்மானிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறும் கோரி, ஓசத லக்மால் ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(28) அனுமதி வழங்கியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், பாராளுமன்ற செயலாளர் நாயகம், சட்ட மா அதிபர் உள்ளிட்ட 15 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது. 

மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், டயனா கமகேவின் குடியுரிமை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு இன்று(28) உத்தரவிட்டது.

பிரித்தானிய பிரஜையான டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என தீர்மானிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறும் கோரி, ஓசத லக்மால் ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...