Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

வியட்நாமில் தங்கவைக்கப்பட்டவர்களில் சாவகச்சேரியை சேர்ந்தவர் உயிரிழப்பு

T

The Leader Desk

நவம்பர் 24, 2022 • 1:08 PM

வியட்நாமில் தங்கவைக்கப்பட்டவர்களில் சாவகச்சேரியை சேர்ந்தவர் உயிரிழப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வியட்நாமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.
  • வியட்நாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இருவர், தங்களை நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என தெரிவித்து கடந்த 18 ஆம் திகதி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.
  • தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 37 வயதான ஒருவர் நேற்று (23) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
  • இவர் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கல்வயல் பகுதியை சேர்ந்த 37 வயதான நபர் என தெரியவந்துள்ளது.
எழுத்து அளவு:

வியட்நாமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.

வியட்நாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இருவர், தங்களை நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என தெரிவித்து கடந்த 18 ஆம் திகதி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். குறித்த இருவரும் வியட்நாமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் குணமடைந்துள்ளார்.

தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 37 வயதான ஒருவர் நேற்று (23) அதிகாலை உயிரிழந்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கல்வயல் பகுதியை சேர்ந்த 37 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரன் என்பவரே உயிரிழந்துள்ளதாக அவரின் உறவினர்கள் உறுதிப்படுத்தினர். 

உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான உதவிகளை மேற்கொள்ளுமாறு சுந்தரலிங்கம் கிரிதரனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், மரணத்திற்கான காரணம் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில் கடந்த 08 ஆம் திகதி 303 அகதிகளும் வியட்நாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

வியட்நாமிலுள்ள மூன்று முகாம்களில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வியட்நாமில் தங்கவைக்கப்பட்டவர்களில் சாவகச்சேரியை சேர்ந்தவர் உயிரிழப்பு | Tamil Leader | We Lead the Nation