Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

குஷானை நாட்டிற்கு அனுப்புமாறு கோரிக்கை

T

The Leader Desk

நவம்பர் 24, 2022 • 6:16 AM

குஷானை  நாட்டிற்கு அனுப்புமாறு கோரிக்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் மூன்றாம் நிலை செயலாளர் E.குஷான் என்பவரை நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு ஓமான் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
  • குறித்த நபரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலைப்படுத்துமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பொலிஸார் எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.
  • இதனிடையே, ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் நிலை செயலாளர், பெண்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக ஓமானில் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியுள்ள பெண் ஒருவரால் இலங்கை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் 05 பக்கங்களை கொண்ட கடிதமொன்று நியூஸ்பெஸ்ட்டுக்கும் கிடைத்தது.
எழுத்து அளவு:

முன்னாள் மூன்றாம் நிலை செயலாளர் E.குஷான் என்பவரை நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு ஓமான் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த நபரை நாட்டிற்கு அனுப்பும் திகதி தொடர்பில் ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தினால் இதுவரை அறிவிக்கப்படவில்லை என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

குறித்த நபரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலைப்படுத்துமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பொலிஸார் எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.  

இதனிடையே, ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் நிலை செயலாளர், பெண்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக ஓமானில் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியுள்ள பெண் ஒருவரால் இலங்கை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் 05 பக்கங்களை கொண்ட கடிதமொன்று நியூஸ்பெஸ்ட்டுக்கும் கிடைத்தது.

ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் நிலை செயலாளர், இலங்கை பெண்களை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...