குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்தததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓமானில் நடத்தப்பட்ட ஆட்கடத்தல் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறையினரின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இது அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாவின் நேரடி மேற்பார்வையில் இந்த விசாரணை இடம்பெற்று வருகின்றது.
அதன்படி, நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இலங்கையில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி தொடர்பில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஆஷா திஸாநாயக்க என்ற பெண் தம்புள்ளையை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவர் கடந்த சில காலமாக தலைமறைவாகி இருந்தார்.
பல நாட்களாக பொலிஸாரிடம் இருந்து தலைமறைவாகியிருந்த அவர், இன்று காலை ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இரண்டு சட்டத்தரணிகளுடன் சரணடைந்துள்ளார்.
அதன்படி தற்போது அவரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓமானிற்கு ஆட்கடத்தல் - பிரதான சந்தேகநபர் கைது
T
The Leader Desk
நவம்பர் 21, 2022 • 7:37 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்தததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- அதன்படி, நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இலங்கையில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி தொடர்பில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
- ஓமானில் நடத்தப்பட்ட ஆட்கடத்தல் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறையினரின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

