Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

ஓமான் ஆட்கடத்தலுடன் தொடர்பு: வத்தளையை சேர்ந்தவருக்கு விளக்கமறியல்

T

The Leader Desk

நவம்பர் 19, 2022 • 12:33 PM

ஓமான் ஆட்கடத்தலுடன் தொடர்பு: வத்தளையை சேர்ந்தவருக்கு விளக்கமறியல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். துபாயில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
  • வத்தளையை சேர்ந்த 40 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
  • இதனிடையே, ஆட்கடத்தலில் ஈடுபட்ட இரண்டு அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

எதிர்வரும்  24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

துபாயில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

வத்தளையை சேர்ந்த 40 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதானையில் அலுவலகம் ஒன்றை நடத்தி வரும் குறித்த சந்தேகநபர், ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஆட்கடத்தலில் ஈடுபட்ட இரண்டு அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் ஊடகப்பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார். 

இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய ஒருவர் வௌிநாடு சென்றுள்ளதால், அவருக்கான பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனங்கள் தொடர்பில் பணியகத்தினால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஓமான் உள்ளிட்ட நாடுகளுக்கு இலங்கை பெண்களை கடத்துவோருக்கு எதிராக பாரபட்சம் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். 

ஓமானில் பாலியல் நடவடிக்கைகளுக்காக இலங்கை பெண்கள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே, பிரதமர் இந்த விடயத்தைக் கூறினார். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...