Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

நாடு திரும்புகிறார் பசில்!

T

The Leader Desk

நவம்பர் 18, 2022 • 3:38 AM

நாடு திரும்புகிறார் பசில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்றிரவு அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட அவர், நாளை (சனிக்கிழமை) இலங்கையை வந்தடைவார் என்றும் பொதுஜன பெரமுனவை மறுசீரமைக்கத் தொடங்குவார் என்றும் அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
  • அடுத்த ஆண்டுக்குப் பின்னர் புதிய தேர்தலுக்குச் செல்வதற்கான முடிவு எடுக்கப்படும் வரை எந்தவித இடையூறும் இன்றி செயற்படும் வகையில் வரவு செலவுத் திட்டத்திற்கு 2/3 பெரும்பான்மையைப் பெறுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
  • எவ்வாறாயினும், டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெறும் வரவு செலவுத் திட்டத்திட்டம் மீதான இறுதி வாக்களிப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடலைத் தொடங்குவது அவரது உடனடி பணியாக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:
 

நேற்றிரவு அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட அவர், நாளை (சனிக்கிழமை) இலங்கையை வந்தடைவார் என்றும் பொதுஜன பெரமுனவை மறுசீரமைக்கத் தொடங்குவார் என்றும் அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெறும் வரவு செலவுத் திட்டத்திட்டம் மீதான இறுதி வாக்களிப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடலைத் தொடங்குவது அவரது உடனடி பணியாக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டுக்குப் பின்னர் புதிய தேர்தலுக்குச் செல்வதற்கான முடிவு எடுக்கப்படும் வரை எந்தவித இடையூறும் இன்றி செயற்படும் வகையில் வரவு செலவுத் திட்டத்திற்கு 2/3 பெரும்பான்மையைப்  பெறுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

எனவே, பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியவுடன் கட்சியில் பல மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய அரசியல் நெருக்கடியின்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, கடந்த செப்டெம்பர் மாதம் அமெரிக்கா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...