Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் சேவைகளை வருட இறுதிக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை!

T

The Leader Desk

நவம்பர் 15, 2022 • 7:20 AM

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் சேவைகளை வருட இறுதிக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • , அவை விரைவில் சாத்தியமாக வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
  • குறிப்பாக இந்திய நாட்டின் உதவியையும் நாங்கள் கோரவுள்ளோம் .
  • நாட்டுக்கு பெரும் வருமானத்தை ஈட்டி தந்த காங்கேசன்துறை துறைமுகம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அழிவடைந்து தற்பொழுது பயன்பாட்டில் இல்லை இவ்வாறான சம்பவங்கள் மூலமே எமது நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு நாங்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
எழுத்து அளவு:

, அவை விரைவில் சாத்தியமாக வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

 

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையத்தை பார்வையிட்டதோடு அதிகாரிகளுடன் கலந்துரையாடினர் குறித்த விஜயத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டுக்கு பெரும் வருமானத்தை ஈட்டி தந்த காங்கேசன்துறை துறைமுகம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அழிவடைந்து தற்பொழுது பயன்பாட்டில் இல்லை இவ்வாறான சம்பவங்கள் மூலமே எமது நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு நாங்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

அந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாங்கள் மீள வேண்டுமே ஆக இருந்தால் காங்கேசன்துறை துறை போன்ற பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய இடங்களை நாங்கள் மீள புதுப்பித்து அவற்றை செயல்படுத்துவதன் மூலமே நாட்டுக்கு வருமானம் கிடைக்கும்.

தற்போதுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த வேலை திட்டத்தில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். அதன் காரணமாகவே காங்கேசன்துறை துறைமுகத்திற்கு நேரடியாக அமைச்சர் என்ற ரீதியில் நான் விஜயத்தினை மேற்கொண்டு இங்கே மேற்கொள்ளப்பட வேண்டிய வேலை திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து இருக்கின்றேன்.

குறிப்பாக இந்திய நாட்டின் உதவியையும் நாங்கள் கோரவுள்ளோம் . ஏற்கனவே நாங்கள் இந்திய நாட்டின் உதவியுடன் சில வேலை திட்டங்களை இங்கே முன்னெடுத்து இருக்கின்றோம். ஆனால் இங்கே பல வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன அவ்வாறான வேலை திட்டங்களை விரைவில் ஆரம்பித்து மிக விரைவில் இந்த காங்கேசன் துறைமுகத்தினை செயற்படுத்துவதற்கு நாங்கள் முனைகின்றோம்.

அதேபோல் யழ்ப்பண சர்வதேச விமான நிலையமும் நமக்கு ஒரு வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு விமான நிலையம் ஆகும் அந்த விமான நிலையமும் ஓரிரு மாதங்களில் விரைவில் செயற்படுத்தப்படும் குறிப்பாக அமைச்சின் ஒருவர் இந்தியா தான் அந்த விமான நிலையத்தினை செயல்படுத்துவதற்கு தடையாக இருப்பதாக ஊடகவியலாளர் வினவிய போது அது முதலில் அவ்வாறு பிரச்சனை இருந்தது ஆனால் எல்லாம் பேசி சமரச முயற்சியில் ஈடுபட்டு தற்பொழுது எல்லா விடயங்களும் நிறைவடைந்து விட்டன ஓரிரு மாதங்களில் பலாலி விமான சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

அவ்வாறு ஆரம்பித்தால் இலங்கையில் உள்ள மூவின மக்களும் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள மக்களும் ஒன்றிணைந்து இந்த நாட்டில் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை இவைகள் விரைவில் சாத்தியப்பட வேண்டும் என இறைவன் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் சேவைகளை வருட இறுதிக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை! | Tamil Leader | We Lead the Nation