Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

சஜித்துடன் இணையவில்லை – சுதர்ஷினி உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அறிவிப்பு

T

The Leader Desk

நவம்பர் 15, 2022 • 4:05 AM

சஜித்துடன் இணையவில்லை – சுதர்ஷினி உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அறிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொதுஜன பெரமுனவில் இருந்து சுயேட்சையாக இருந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துகொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.
  • அதேநேரம், தாம் வெளிநாட்டில் இருப்பதால் இது தொடர்பில் தனக்கு எந்த உண்மையும் தெரியாது என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியங்கர ஜயரத்னவும் தெரிவித்துள்ளார்.
  • தான் மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, பியங்கர ஜயரத்ன மற்றும் ஜயரத்ன ஹேரத் ஆகியோர் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துகொண்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
எழுத்து அளவு:
 

பொதுஜன பெரமுனவில் இருந்து சுயேட்சையாக இருந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துகொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

தான் மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, பியங்கர ஜயரத்ன மற்றும் ஜயரத்ன ஹேரத் ஆகியோர் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துகொண்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, தாம் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணையவில்லை என  நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேநேரம், தாம் வெளிநாட்டில் இருப்பதால் இது தொடர்பில் தனக்கு எந்த உண்மையும் தெரியாது என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியங்கர ஜயரத்னவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தான் எந்த கூட்டணியிலும் சேரவில்லை என்றும் அவர்சமூக ஊடகங்கள் வாயிலாக கூறியுள்ளார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன மற்றும் ஜயரத்ன ஹேரத் ஆகியோரும் தாங்கள் ஐக்கியக் கூட்டணியில் இணையவில்லை என்றும் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சஜித்துடன் இணையவில்லை – சுதர்ஷினி உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அறிவிப்பு | Tamil Leader | We Lead the Nation