Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை

T

The Leader Desk

நவம்பர் 13, 2022 • 10:16 AM

அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதற்காக தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
  • எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க முடியுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
  • சிறப்பாகவும் நேர்மையாகவும் பொது அல்லது சமூக செயற்பாடுகளில் சிறந்து விளங்கும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் அற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதேவேளை, பாராளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்ட 17 துறைசார் கண்காணிப்பு செயற்குழுக்களுக்கான தலைவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை அடுத்த வாரத்திற்குள் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

அதற்காக தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க முடியுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பாகவும் நேர்மையாகவும் பொது அல்லது சமூக செயற்பாடுகளில் சிறந்து விளங்கும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் அற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் உறுப்பினர், பிரதமர் மற்றும்  எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் 02 உறுப்பினர்கள், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சியின் உறுப்பினர் மற்றும் சிவில் உறுப்பினர்கள் 3 பேர் அடங்களாக அரசியலமைப்பு பேரவையில் 10 பேர் அங்கம் வகிக்கவுள்ளனர்.

21ஆவது திருத்தத்திற்கு அமைவாக, பிரதம நீதியரசர் தலைமையிலான உயர் நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் மற்றும் நீதிபதிகள், சட்ட மா அதிபர், மத்திய வங்கி ஆளுநர், கணக்காய்வாளர் நாயகம், பொலிஸ் மா அதிபர், பாராளுமன்ற செயலாளர் நாயகம், பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான ஒம்புட்ஸ்மன், சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடனேயே நியமிக்கப்படல் வேண்டும்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்ட 17 துறைசார் கண்காணிப்பு செயற்குழுக்களுக்கான தலைவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை அடுத்த வாரத்திற்குள் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...