Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

பிரேரணைகளை அமுல்படுத்துவதில் திருப்திகரமான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை – ஜனாதிபதி

T

The Leader Desk

நவம்பர் 3, 2022 • 10:07 AM

பிரேரணைகளை அமுல்படுத்துவதில் திருப்திகரமான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை – ஜனாதிபதி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னரும் திருப்திகரமான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
  • பொது நிதி மற்றும் நிதி சேவைகள் தொடர்பான குழுக்களை நியமிக்க முன்மொழியப்பட்டாலும் அது இன்னும் நடக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • இந்த விடயம் தொடர்பாக அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இன்று (வியாழக்கிழமை) எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னரும் திருப்திகரமான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இந்த விடயம் தொடர்பாக அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இன்று (வியாழக்கிழமை) எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான பிரேரணைகளில் தேசிய சபை உருவாக்கம் மாத்திரமே இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நீண்ட கால முறையான மாற்றங்களை உருவாக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளில் வங்கி மற்றும் நிதிச் சேவைகள் குழு, பொருளாதார ஸ்திரப்படுத்தல் குழு மற்றும் வழிமுறைகளுக்கான குழு ஆகியவை அடங்கும் என ஜனாதிபதி சபாநாயகரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது நிதி மற்றும் நிதி சேவைகள் தொடர்பான குழுக்களை நியமிக்க முன்மொழியப்பட்டாலும் அது இன்னும் நடக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், துறைசார் குழுக்களுக்கு ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை நியமித்தல் மற்றும் நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை நிறுவுதல் போன்ற யோசனைகளும் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி சபாநாயகரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

17 நாடாளுமன்ற துறைசார் குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டிய போதிலும் இதுவரையில் நியமிக்கப்படவில்லை எனவும் துறைசார் குழுக்களுக்கு நியமிக்கப்படவுள்ள இளைஞர் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான அளவுகோல் மற்றும் அவர்களின் தகுதிகள் தயாரிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த வருட வரவு செலவுத் திட்டம் அமுல்படுத்தப்படும் போது இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் இதனால் அரசாங்கம் எதிர்பார்க்கும் முறைமை மாற்றம் மிக விரைவாக எட்டப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...