Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

நடைமுறை சாத்தியமான, சமமான வரிவிதிப்பு முறையை வலியுறுத்தும் ரவி கருணாநாயக்க

T

The Leader Desk

அக்டோபர் 31, 2022 • 1:32 PM

நடைமுறை சாத்தியமான, சமமான வரிவிதிப்பு முறையை வலியுறுத்தும் ரவி கருணாநாயக்க

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நியாயமானதும், சமமானதுமான வரி விதிப்பு முறைக்கு ஆதரவாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கருத்துத் தெரிவித்துள்ளார்.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்க வருமானம், 8.4% இலிருந்து 33 மாதங்களுக்குள் 15% அதிகரித்தது.
  • அரசாங்க வருவாயில் உள்ள பற்றாக்குறையைச் சமாளிப்பதில் அதிக அனுபவமும் தொழில்ரீதியாக தயாரிக்கப்பட்ட அணுகுமுறையும் தேவை என்று கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
  • "நாம் சுதந்திரம் அடைந்து 75 வருடங்களை நெருங்கிவிட்டோம்.
எழுத்து அளவு:

நியாயமானதும், சமமானதுமான வரி விதிப்பு முறைக்கு ஆதரவாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கருத்துத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக அமுல்படுத்தப்படும் கடுமையான வரி விதிப்புகள், நடைமுறைக்கு மாறானது என்பதோடு, இது நிலையானது அல்ல என்பதை, தற்போது நடைபெற்று வரும் கலந்துரையாடல்கள், விவாதங்கள் ஆகியவற்றிலிருந்து அவதானிக்க முடிவதாக ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

“பல்வேறு வரிகளை நிர்ணயித்து, செலுத்த முடியாதளவு வரிகளை விதிப்பைவிட, எவ்வளவு பணம் சேகரிக்க வேண்டும் என்ற நிதி இலக்கை அடைவதே அணுகுமுறையாக இருக்க வேண்டும்" என்று முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான மோசமான முடிவுகளின் பின்னர் இலங்கை தனது சொந்தக்காலில் நிற்பதற்குப் போராடிக்கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக அதிக பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக நாட்டின் பொருளாதாரம் தள்ளாடி வருகிறது.

ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராக இருந்தபோது, மிகுதிக் கொடுப்பனவு நெருக்கடியைத் தவிர்ப்பதற்கும், இருப்புக்களை நிரப்புவதற்கும், சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிணைக் கடன் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்க வருமானம், 8.4% இலிருந்து 33 மாதங்களுக்குள் 15% அதிகரித்தது. இந்த அதிகரிப்பு வருமான இலக்குகளால் அடையப்பட்டதே தவிர, வரி செலுத்துவோரின் நிகர அடிப்படையிலான பரந்த வரிகளின் சதவீதத்தால் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க வருவாயில் உள்ள பற்றாக்குறையைச் சமாளிப்பதில் அதிக அனுபவமும் தொழில்ரீதியாக தயாரிக்கப்பட்ட அணுகுமுறையும் தேவை என்று கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
“இலங்கையர்கள் தாங்கள் செலுத்தும் வரி நியாயமானது அல்ல என்று நினைக்கின்றனர். தாம் செலுத்தும் வரிப் பணத்தை, அரசாங்க ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் வீண்விரயம் செய்வதுடன், சுரண்டுவதாக மக்கள் கருதுகின்றனர். மிகப் பெரிய சவாலான விடயம்.’’ என்றும் அவர் கூறினார்.

“அரசாங்கம் வரியாக அறவிடும் ஒவ்வொரு ரூபாயும் சரியான முறையில் செலவிடப்படுகிறது என்பதை மக்கள் மனதில் பதியச் செய்வது அவசியம்" என முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.

"நாம் சுதந்திரம் அடைந்து 75 வருடங்களை நெருங்கிவிட்டோம். ஆனால் உண்மையிலேயே பொருளாதார சுதந்திரம் கிடைத்திருக்கிறதா?" என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

“இலங்கையின் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும் இந்த நேரத்தில், அதை வழமைக்கு கொண்டுவர அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். ஒவ்வொரு இலங்கையரும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், வருமானத்தை ஈட்டுவதற்கும் கடுமையாக உழைக்க வேண்டும்" என்று ரவி கருணாநாயக்க கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...