Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

இரட்டைப் பிரஜைகள் யார் என்பதைக் கண்டறிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் குடிவரவு திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பு

T

The Leader Desk

அக்டோபர் 27, 2022 • 10:48 AM

இரட்டைப் பிரஜைகள் யார் என்பதைக் கண்டறிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் குடிவரவு திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை குடிவரவு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • சபாநாயகரின் இந்த வேண்டுகோளுக்கு இணங்க குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று கடந்த சில நாட்களாக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியுரிமை தொடர்பாக விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
  • இந்த விசாரணையில் தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வந்த மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு இரட்டைக் குடியுரிமை உண்டு என்பதை குடிவரவுத் திணைக்களம் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை குடிவரவு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

சபாநாயகரின் இந்த வேண்டுகோளுக்கு இணங்க குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று கடந்த சில நாட்களாக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியுரிமை தொடர்பாக விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணையில் தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வந்த மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு இரட்டைக் குடியுரிமை உண்டு என்பதை குடிவரவுத் திணைக்களம் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த விசாரணையில் அந்தந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் கடவுச்சீட்டு பெறும் போது வழங்கிய தகவல்கள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் வேறு நாட்டின் குடியுரிமை உள்ளவரா என்ற தகவல்களை உறுதிப்படுத்த முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் இந்த நாட்டில் கடவுச்சீட்டு பெறும் போது அதனை மறைப்பதற்கு அடிக்கடி தூண்டப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

இரட்டைக் குடியுரிமையை மறைத்து அல்லது அறிவிப்பதைத் தவிர்த்தால் அதை மீண்டும் விசாரிக்கும் அமைப்பு அமைப்பில் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...