தரமற்ற கோதுமை மா இறக்குமதி செய்யப்பட்டு , மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வியாழக்கிழமை ப்ரீமா நிறுவனம் மற்றும் தர நிர்ணயசபை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அசேல சம்பத் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்கிழமை தர நிர்ணயசபை அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் தரத்தை பரிசோதிக்கும் அதிகாரம் இலங்கை தர நிர்ணய சபைக்கு வழங்கப்பட வேண்டும். தர நிர்ணய சபைக்கு சுமார் 100 பொருட்களின் தரத்தை பரிசோதிப்பதற்கான அதிகாரம் மாத்திரமே காணப்படுகிறது.
ஆனால் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் சுமார் ஆயிரக்கணக்கான பொருட்களின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.
ஆனார் தர நிர்ணயசபைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி மற்றும் மா தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் கிடையாது. இது சிக்கல் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு கூட தெரியாது. இறக்குமதி தொடர்பான நிர்வாக அதிகாரியை சந்தித்து , இது தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளோம்.
தற்போது இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா விலங்களுக்கு வழங்குவதற்கு பொறுத்தமானதாகவே காணப்படுகிறது. அது மனித பாவனைக்கு உகந்ததல்ல.
இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவில் சிறு வண்டுகளும் , புழுக்களும் இனங்காணப்பட்டுள்ளன. எனவே கோதுமை மா களஞ்சியசாலைகளை பரிசோதிக்குமாறு ஜனாதிபதி , விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை உள்ளிட்ட அனைவரையும் வலியுறுத்துகின்றோம்.
நாட்டில் கோதுமை மாவை இறக்குமதி செய்யும் பிரதான நிறுவனமான பரீமா நிறுவன வளாகத்திலும் , தர நிர்ணய சபை வளாகத்திலும் நாளை வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
எமது ஆர்ப்பாட்டத்தை எதிர்கொள்ள தயாராகுமாறு அவர்களுக்கு முன்னறிவித்தல் விடுக்கின்றோம். தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள மாவை அடுத்தடுத்த தேர்தல்களில் துண்டு பிரசுரங்களை ஒட்டுவதற்காக சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.
நாட்டில் தற்போது இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா மனித பாவனைக்கு உகந்ததல்ல , துரித பரிசோதனைக்கு உத்தரவு!
T
The Leader Desk
அக்டோபர் 26, 2022 • 7:01 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அவற்றில் சிறிய வண்டுகள் மற்றும் புழுக்கள் காணப்படுகின்றன.
- தர நிர்ணய சபைக்கு சுமார் 100 பொருட்களின் தரத்தை பரிசோதிப்பதற்கான அதிகாரம் மாத்திரமே காணப்படுகிறது.
- இறக்குமதி தொடர்பான நிர்வாக அதிகாரியை சந்தித்து , இது தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளோம்.
எழுத்து அளவு:
. அவற்றில் சிறிய வண்டுகள் மற்றும் புழுக்கள் காணப்படுகின்றன. எனவே கோதுமை மா களஞ்சியசாலைகளில் துரித பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் , இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் தரத்தைப் பரிசோதிக்கும் அதிகாரத்தை தர நிர்ணய சபைக்கு வழங்குமாறும் அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

