Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

பொருத்தமான அம்சங்களை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் - அநுர

T

The Leader Desk

அக்டோபர் 21, 2022 • 11:02 AM

பொருத்தமான அம்சங்களை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் - அநுர

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என மக்கள் விடுதலை முன்னணியின் ( ஜே .வி.பி) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
  • ஒரு திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்து, அதே திருத்தத்துக்கு எதிராகவும் வாக்களிக்கும் வேடிக்கையான மனிதர்கள் இந்த பாராளுமன்றத்தில் உள்ளனர்.
  • மாறாக இருக்கின்ற அரசியலமைப்பில் மாற்றங்களை செய்தோ, அல்லது இந்த திருத்தங்களுக்கு எல்லாம் வாக்களித்தவர்களை கொண்டோ புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியாது என்றார்.
எழுத்து அளவு:

என  மக்கள் விடுதலை முன்னணியின் ( ஜே .வி.பி)  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான   அநுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஒரு திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்து, அதே  திருத்தத்துக்கு எதிராகவும் வாக்களிக்கும் வேடிக்கையான மனிதர்கள் இந்த பாராளுமன்றத்தில் உள்ளனர் எனவும் அவர் விமர்சித்தார். 

பாராளுமன்றத்தில்  இன்று (22) இடம்பெற்ற, அரசியலமைப்பின்  22ஆவது  திருத்தச் சட்டமூல வரைபின் இரண்டாம் வாசிப்பு  மீதான விவாதத்தில்  உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இதுவரை  திருத்தம் செய்யப்பட்ட அனைத்து திருத்தங்களுக்கும்  எவ்வித வேறுபாடுமின்றி ஆதரவாக வாக்களித்தவர்கள் இன்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர். ஒரு திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்து, அதே  திருத்தத்துக்கு எதிராகவும் வாக்களிக்கும் வேடிக்கையான மனிதர்கள் இந்த பாராளுமன்றத்தில் உள்ளனர். 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் பெரும்பாலான சிரேஷ்ட அரசியல்வாதிகள் தற்போது 22ஆவது திருத்தமே இறுதித் தீர்வு என புகழ் பாடுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார். 

ஜனநாயகத்தை பாதுகாத்து ,தமிழ் ,முஸ்லிம்,சிங்கள மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பொருத்தமான அம்சங்களை உள்ளடக்கிய வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். மாறாக இருக்கின்ற அரசியலமைப்பில் மாற்றங்களை செய்தோ, அல்லது இந்த திருத்தங்களுக்கு எல்லாம் வாக்களித்தவர்களை கொண்டோ புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியாது என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...