Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானத்திற்கு எதிரான கூட்டறிக்கை கைச்சாத்து

T

The Leader Desk

அக்டோபர் 20, 2022 • 12:33 PM

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானத்திற்கு எதிரான கூட்டறிக்கை கைச்சாத்து

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேர்தல் வரைபடத்தை சுருங்கச் செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கூட்டாக இன்று (20) கையெழுத்திட்டன.
  • பாராளுமன்றத்தின் குழு இலக்க அறை 7 இல் இது இடம் பெற்றது.
  • தேர்தல் சீர்திருத்தம் என்ற போர்வையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால், தனித்தனி கட்சியாகவும், கூட்டாகவும் கடுமையாக எதிர்ப்பது என ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதோடு, அந்த முடிவின் பிரகாரம், ஒரு பூர்வாங்க நடவடிக்கையாக அறிக்கையில் கையொழுத்திடப்பட்டது.
எழுத்து அளவு:

தேர்தல் வரைபடத்தை சுருங்கச் செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கூட்டாக இன்று (20) கையெழுத்திட்டன. பாராளுமன்றத்தின் குழு இலக்க அறை 7 இல் இது இடம் பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, 43 ஆம் படையணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, பிவிதுரு ஹெல உருமய, ஸ்ரீ லங்கா மஹாஜன பக்ஷய, இலங்கை சமசமாஜ கட்சி, ஶ்ரீலங்கா கமியூனிடிஸ் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நவ லங்கா நிதஹஸ் பக்ஷய, ஜனநாயக மக்கள் முன்னணி, விஜயதரணி தேசிய சபை, முன்னிலை சோஷலிஸ கட்சி, உத்தர சபா உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் கூட்டம் ஜயவர்தனபுரவில் உள்ள MONARCH IMPERIAL இல் கடந்த 12 ஆம் திகதி நடைபெற்றதோடு, இதில் கலந்து கொண்ட கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் ஏகோபித்த தீர்மானத்தின் படி இந்த கூட்டறிக்கை வெளியிடப்படுகிறது.

தேர்தல் சீர்திருத்தம் என்ற போர்வையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால், தனித்தனி கட்சியாகவும், கூட்டாகவும் கடுமையாக எதிர்ப்பது என ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதோடு, அந்த முடிவின் பிரகாரம், ஒரு பூர்வாங்க நடவடிக்கையாக அறிக்கையில் கையொழுத்திடப்பட்டது.

இது தொடர்பான அறிக்கையில் கையெழுத்திட மக்கள் விடுதலை முன்னணி தனது முழு உடன்பாட்டையும் தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக மதத் தலைவர்கள்,சிவில் அமைப்புகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட தரப்பிற்கு தனித்தனியாக தெளிவூட்டுவதற்கும், மக்களுக்குத் தெளிவூட்டுவதற்கும்,அதற்கு அப்பால் இந்த தன்னிச்சையான செயல்முறை குறித்து சர்வதேச சமூகத்திற்கும் தெரிவிக்கவும் நடவடிக்கை எட்டப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...