Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

செய்கடமை நிதியம் மூடப்பட்டது

T

The Leader Desk

அக்டோபர் 20, 2022 • 12:30 PM

செய்கடமை நிதியம் மூடப்பட்டது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் செயல்பாடுகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • கோடியே 71 இலட்சத்து 64 ஆயிரத்து 785 ரூபாய் 58 சதத்தை நிதியம் நன்கொடையாக பெற்றதுடன், 199 கோடியே 75 இலட்சத்து 69 ஆயிரத்து 456 ரூபாய் 56 சதம் செலவிடப்பட்டுள்ளது.
  • பிசிஆர் பரிசோதனைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள், தடுப்பூசித் திட்டங்கள், அவசர சிகிச்சை பிரிவுகளுக்கான கட்டில்கள் மற்றும் மருந்து கொள்வனவுக்கு மேற்குறிப்பிட்ட பணம் செலவிடப்பட்டுள்ளது.
  • மேலும், ஒக்டோபர் 18ஆம் திகதியன்று குறித்த நிதியில் 21 கோடியே 8 இலட்சத்து 77 ஆயிரத்து 431 ரூபாய் 05 சதம் மீதி காணப்படுவதுடன், சத்திரசிகிச்சை மற்றும் மருத்துவ உதவிக்கான ஜனாதிபதி நிதியத்தில் அந்தப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

கொவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் செயல்பாடுகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

85737373 என்ற இலங்கை வங்கி கணக்கு இலக்கத்தில் இயங்கி வந்த குறித்த நிதியமானதும் 18 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளதாக நிதியத்தின் செயலாளர் டொக்டர் தாரக லியனபத்திரன பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். 

நாட்டில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடவும் தடுப்பூசி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கும், நிதியத்துக்கு பங்களித்த நன்கொடையாளர்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்த அவர், காசோலைகள் மற்றும் பணத்தை நிதியத்துக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறும் அறிவித்தார்.
 .
220 கோடியே 71 இலட்சத்து 64 ஆயிரத்து 785 ரூபாய் 58 சதத்தை நிதியம் நன்கொடையாக பெற்றதுடன், 199 கோடியே 75 இலட்சத்து 69 ஆயிரத்து 456 ரூபாய் 56 சதம் செலவிடப்பட்டுள்ளது.

பிசிஆர் பரிசோதனைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள், தடுப்பூசித் திட்டங்கள், அவசர சிகிச்சை பிரிவுகளுக்கான கட்டில்கள் மற்றும் மருந்து கொள்வனவுக்கு மேற்குறிப்பிட்ட பணம் செலவிடப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டோபர் 18ஆம் திகதியன்று குறித்த நிதியில் 21 கோடியே 8 இலட்சத்து 77 ஆயிரத்து 431 ரூபாய் 05 சதம் மீதி காணப்படுவதுடன், சத்திரசிகிச்சை மற்றும் மருத்துவ உதவிக்கான ஜனாதிபதி நிதியத்தில் அந்தப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...