Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

பொதுத் தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

T

The Leader Desk

அக்டோபர் 20, 2022 • 5:47 AM

பொதுத் தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
  • இல்லையெனில் பெரும்பான்மை வாக்குகளுடன் நாடாளுமன்றத்தை கலைக்க கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் அந்தக் கோரிக்கையை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து ஜனாதிபதியே தீர்மானிக்க முடியுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:
 

கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குகூட கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இல்லையெனில் பெரும்பான்மை வாக்குகளுடன் நாடாளுமன்றத்தை கலைக்க கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் அந்தக் கோரிக்கையை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து ஜனாதிபதியே தீர்மானிக்க முடியுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அதை ஏற்கவில்லை என்றால், எதுவும் செய்ய முடியாது என்றும் எனவே, இந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு எதிர்காலத்தில் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை பழைய வாக்களிப்பு முறையிலேயே நடத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது இன்றியமையாதது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...