Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

இலங்கையின் மிகப் பெரிய மனித புதைகுழி! விசாரணை எப்போது?

T

The Leader Desk

அக்டோபர் 19, 2022 • 3:52 AM

இலங்கையின் மிகப் பெரிய மனித புதைகுழி! விசாரணை எப்போது?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மன்னார் நீதவான் ஏ.எஸ்.ஹிபதுல்லாஹ் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
  • வழக்கு தொடர்பான அறிக்கைகளை கடந்த மே மாதம் 18ஆம் திகதி தாம் அனுப்பியிருந்ததாக சட்ட வைத்திய அதிகாரி மன்றுக்கு அறிவித்துள்ளார்.
  • அதற்கமைய, புதைகுழி அகழ்விற்கு தேவையான நிதி, உதவி தேவைப்படும் திணைக்களங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
  • அந்த அறிக்கைக்கு அமைய, சதொச மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை எப்போது ஆரம்பிப்பது என்பதை மன்றுக்கு அறிவிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் 17ஆம் திகதி உத்தரவிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

மன்னார் நீதவான் ஏ.எஸ்.ஹிபதுல்லாஹ் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் அழைப்பாணைக்கு அமைய, சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ மன்றில் ஆஜராகியிருந்தார்.

வழக்கு தொடர்பான அறிக்கைகளை கடந்த மே மாதம் 18ஆம் திகதி தாம் அனுப்பியிருந்ததாக சட்ட வைத்திய அதிகாரி மன்றுக்கு அறிவித்துள்ளார்.

அதற்கமைய, புதைகுழி அகழ்விற்கு தேவையான நிதி, உதவி தேவைப்படும் திணைக்களங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைக்கு அமைய, சதொச மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை எப்போது ஆரம்பிப்பது என்பதை மன்றுக்கு அறிவிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் 17ஆம் திகதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதி தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்படும் பட்சத்தில், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மனித புதைகுழி அகழ்விற்கான திகதியை மன்றுக்கு அறிவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான் எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...