Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

ஆடம்பரமான கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை நிறுத்துமாறு கொழும்பு பேராயர் கோரிக்கை!

T

The Leader Desk

அக்டோபர் 17, 2022 • 11:16 AM

ஆடம்பரமான கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை நிறுத்துமாறு கொழும்பு பேராயர் கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நீர்கொழும்பு – படபத்தல புனித தெரேசா தேவாலயத்தில் நடைபெற்ற சமய ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராயர், இந்த வருட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை பசியைப் போக்குவதற்காக மட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
  • இதேநேரம், ஈஸ்டரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
  • நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த கிறிஸ்மஸில் தேவாலயங்கள் மற்றும் பிற இடங்களை அலங்கரிப்பதற்காக ஒருவர் பணத்தை வீணாக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
 

நீர்கொழும்பு – படபத்தல புனித தெரேசா தேவாலயத்தில் நடைபெற்ற சமய ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராயர், இந்த வருட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை பசியைப் போக்குவதற்காக மட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த கிறிஸ்மஸில் தேவாலயங்கள் மற்றும் பிற இடங்களை அலங்கரிப்பதற்காக ஒருவர் பணத்தை வீணாக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

பசியில் வாடுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர் என்றும் எனவே, இந்த ஆண்டு கிறிஸ்மஸ் சமயத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்குவது மட்டுமே செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், ஈஸ்டரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி, பின் வாசலில் இருந்து வந்தவர் என்பதால், அவர் இப்போது வகிக்கும் பதவியை வகிக்க மக்களின் சம்மதம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு,  தாக்குதலின் பின்னணியில் அரசியல் கை இருக்கலாம் என தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...