Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

பார்வையற்றோரின் எண்ணிக்கை இரண்டு இலட்சமாக அதிகரித்துள்ளது!

T

The Leader Desk

அக்டோபர் 14, 2022 • 6:18 AM

பார்வையற்றோரின் எண்ணிக்கை இரண்டு இலட்சமாக அதிகரித்துள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எனினும், அதற்குத் தேவையான சத்திரசிகிச்சைகளைச் செய்வதற்கான வசதிகள் இல்லை என கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் எம்.டி.எஸ்.
  • அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் கண் சத்திரசிகிச்சைகளுக்கு பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்ட லென்ஸ்கள் மற்றும் மருந்துகளே தற்போது பயன்படுத்தப்படுகின்றன.
  • இந்நிலைமையால் கண் சத்திரசிகிச்சைகள் தாமதமானதுடன் தேசிய வைத்தியசாலையில் இந்த மாதத்தில் மாத்திரம் சுமார் 500 பேர் கண் சத்திரசிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எழுத்து அளவு:
 

எனினும், அதற்குத் தேவையான சத்திரசிகிச்சைகளைச் செய்வதற்கான வசதிகள் இல்லை என கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் எம்.டி.எஸ். குணதிலக்க தெரிவித்துள்ளார்.

சத்திரசிகிச்சைக்கு தேவையான கான்டாக்ட் லென்ஸ்கள், தடுப்பூசிகள் மற்றும் இதர சத்திரசிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கிராமப்புற மக்கள் மத்தியில் கண் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் கண் சத்திரசிகிச்சைகளுக்கு பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்ட லென்ஸ்கள் மற்றும் மருந்துகளே தற்போது பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலைமையால் கண் சத்திரசிகிச்சைகள் தாமதமானதுடன் தேசிய வைத்தியசாலையில் இந்த மாதத்தில் மாத்திரம் சுமார் 500 பேர் கண் சத்திரசிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய டொலர் நெருக்கடி காரணமாக இலங்கைக்கு கான்டாக்ட் லென்ஸ்கள் இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, கண் வைத்தியசாலைக்கு மருந்துகள் மற்றும் லென்ஸ்கள் வழங்குபவர்களுக்கு அதற்கான வாய்ப்பு இருப்பதாக தேசிய கண் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் தற்போது பார்வையற்றோரின் எண்ணிக்கை இரண்டு லட்சமாக அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிடப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...