Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவர் வெளிநாடு செல்ல தடை

T

The Leader Desk

அக்டோபர் 11, 2022 • 9:30 AM

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவர் வெளிநாடு செல்ல தடை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சதொச ஊழியர் குழுவை பணியிலிருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தியமை மூலம் அரசாங்கத்திற்கு 59 இலட்சம் ரூபாவுக்கும் அதிக தொகை நட்டம் ஏற்படுத்தியதாக பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
  • இதனையடுத்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை தலா 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறும், அவர்களின் கைரேகைகளை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
  • இதனைத் தொடர்ந்து விசாரணையை நவம்பர் 29ஆம் திகதிக்கு மேல் நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
எழுத்து அளவு:
 

அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சதொச ஊழியர் குழுவை பணியிலிருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தியமை மூலம் அரசாங்கத்திற்கு 59 இலட்சம் ரூபாவுக்கும் அதிக தொகை நட்டம் ஏற்படுத்தியதாக பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு இன்று மீண்டும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளில் குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.டி.ஏ.வின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் சாகிர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை தலா 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறும், அவர்களின் கைரேகைகளை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன், பிரதிவாதிகளான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கும் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விசாரணையை நவம்பர் 29ஆம் திகதிக்கு மேல் நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...