Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

போராட்டங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம் என்கிறது பொலிஸ்!

T

The Leader Desk

அக்டோபர் 11, 2022 • 7:23 AM

போராட்டங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம் என்கிறது பொலிஸ்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நலமாக உள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
  • இதன்போது பொலிசாருக்கும், ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
  • இதேவேளை, சிறுவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்புச் சபைக்குச் சென்று நேற்று (10) முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

நலமாக உள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த குழந்தைக்கு வெளிப்புற அல்லது உள்புற காயங்கள் எதுவும் இல்லை என்றும் குழந்தை நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களுக்கு சிறுவர்களை அல்லது குழந்தைகளை அழைத்துச் செல்வது பொருந்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை பெற்றோர் தெரிந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து கடந்த ஒன்பதாம் திகதி காலிமுகத்திடலில் நினைவேந்தல் போராட்டமொன்று நடத்தப்பட்டது. இதன்போது பொலிசாருக்கும், ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து பொலிசாருக்கும், ஆர்ப்பாட்டக் கார்களுக்கும் இடையில் நடந்த தள்ளுமுள்ளு காரணமாக குழந்தைகளுடன் இருந்த தாய்மார் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

இதேவேளை, சிறுவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்புச் சபைக்குச் சென்று நேற்று (10) முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளனர்.

இதேவேளை, இவ்வாறான போராட்டங்களுக்கு சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அழைத்துச்செல்லப்படக்கூடாது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...