Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

எமக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களால் நாம் தனித்துவிடப்பட்டுள்ளோம் என அர்த்தப்படாது – பிரதமர்

T

The Leader Desk

அக்டோபர் 7, 2022 • 8:21 AM

எமக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களால் நாம் தனித்துவிடப்பட்டுள்ளோம் என அர்த்தப்படாது – பிரதமர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்றத்தில் இன்று ஜெனீவா கூட்டத்தொடர் குறித்த கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
  • முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விடுதலைப்புலிகள் இயக்கத்தை சார்ந்த கைதிகள் பலரை விடுதலை செய்தார் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • ஜெனீவா தீர்மானத்தில் அவர்களின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், இந்த நாடுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையுடன் முன்னெடுக்கும் வர்த்தக மற்றும் உதவித்திட்டங்களை நிறுத்திக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
 

நாடாளுமன்றத்தில் இன்று ஜெனீவா கூட்டத்தொடர் குறித்த கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா தீர்மானத்தில் அவர்களின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், இந்த நாடுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையுடன் முன்னெடுக்கும் வர்த்தக மற்றும் உதவித்திட்டங்களை நிறுத்திக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு முன்னால் எமது நாடு எதிர்கொண்டுவரும் நெருக்கடி என்னவென்பது எமக்கு நன்றாகத் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மனித உரிமைகள் குறித்து நாம் பின்பற்றுகின்ற வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் அதன் பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் நன்கு அறிவோம் என அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விடுதலைப்புலிகள் இயக்கத்தை சார்ந்த கைதிகள் பலரை விடுதலை செய்தார் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், எஞ்சியுள்ள சிறைக்கைதிகளை விடுதலை செய்வது குறித்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தெளிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவற்றை அமைச்சர் அலி சப்ரியும் ஜெனீவாவில் தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளார் என பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் பயங்கரவாதத்தடை சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியிலும் தற்போது சட்டமூலம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்று, அதனை சட்டமாக்கும் நடவடிக்கைகள் நீதி அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...