Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை முறையாக நடைமுறைப்படுத்தினால் நாட்டுக்கு பாரிய நன்மைகள் ஏற்படும் – ரணில்

T

The Leader Desk

அக்டோபர் 6, 2022 • 6:10 AM

சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை முறையாக நடைமுறைப்படுத்தினால் நாட்டுக்கு பாரிய நன்மைகள் ஏற்படும் – ரணில்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எனவும் அதனை முறையாக நடைமுறைப்படுத்த முடிந்தால் நாட்டுக்கு பாரிய நன்மைகள் ஏற்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
  • மேலும் கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்திருப்பது நல்ல அறிகுறி என்று கூறிய ஜனாதிபதி, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளால் ஜப்பானுடனான நட்புறவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  • நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

எனவும் அதனை முறையாக நடைமுறைப்படுத்த முடிந்தால் நாட்டுக்கு பாரிய நன்மைகள் ஏற்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த உடன்படிக்கை தென்கிழக்காசியாவுடனான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதலீடுகளை விஸ்தரிப்பதற்கு ஜப்பான் ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி என்பன ஆதரவை வழங்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்திருப்பது நல்ல அறிகுறி என்று கூறிய ஜனாதிபதி, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளால் ஜப்பானுடனான நட்புறவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த காலத்தில் இருந்து சீனா எமது நாட்டுக்கு ஆதரவளித்து வருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான கலந்துரையாடலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவின் ஆதரவு எப்போதும் எமது நாட்டுக்கு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற கடன் வழங்கும் நாடுகளுடன் கூடிய விரைவில் ஒப்பந்தம் செய்துகொள்ள இலங்கை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...