Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

பொலிஸார் துப்பாக்கிச் சூடு – பேருந்தில் பயணித்த பெண் உயிரிழப்பு !

T

The Leader Desk

அக்டோபர் 2, 2022 • 4:50 AM

பொலிஸார் துப்பாக்கிச் சூடு – பேருந்தில் பயணித்த பெண் உயிரிழப்பு !

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சம்பவத்தில் உயிரிழந்தவர் 29 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
  • அதன்போது அவர்கள் தப்பியோட முயன்ற நிலையில், கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
  • தங்கோவிட்ட பிரதேசத்தில் உள்ள மதுபானசாலைக்கு நேற்று இரவு பிரவேசித்த சிலர், அங்கு கொள்ளையிட்டு தப்பியோட முயன்றுள்ளனர்.
எழுத்து அளவு:
 

சம்பவத்தில் உயிரிழந்தவர் 29 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்கோவிட்ட பிரதேசத்தில் உள்ள மதுபானசாலைக்கு நேற்று இரவு பிரவேசித்த சிலர், அங்கு கொள்ளையிட்டு தப்பியோட முயன்றுள்ளனர்.

இது தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தங்கொவிட்ட பொலிஸ் குழுவொன்று குறித்த இடத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்போது அவர்கள் தப்பியோட முயன்ற நிலையில், கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின்போது, கலென்பிந்துனுவெவயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றின் மீதும், பொலிஸார் தற்செயலாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அதில்,பேருந்தின் பின் ஆசனத்தில் இருந்த பெண் ஒருவர் படுகாயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பொலிஸார் துப்பாக்கிச் சூடு – பேருந்தில் பயணித்த பெண் உயிரிழப்பு ! | Tamil Leader | We Lead the Nation