Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

உலக சிறுவர் தினத்தன்று மங்கள வீடியோ வைரலாகிறது

T

The Leader Desk

அக்டோபர் 2, 2022 • 4:40 AM

உலக சிறுவர் தினத்தன்று மங்கள வீடியோ வைரலாகிறது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்த கருத்தொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
  • இந்த ஆண்டு உலக சிறுவர்கள் தினத்தின் கருப்பொருள் "புன்னகைகளின் உலகம்" என்பதாகும்.
  • “இந்த சிறுவர்கள் அரசியல்வாதிகளின் காலில் விழுவதை நான் விரும்பவில்லை, சிறுவர்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம்.
எழுத்து அளவு:

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்த கருத்தொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

“இந்த சிறுவர்கள் அரசியல்வாதிகளின் காலில் விழுவதை நான் விரும்பவில்லை, சிறுவர்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம். அவர்கள் முதுகை நிமிர்ந்து வாழ வேண்டும். எனவே இனி அரசியல்வாதிகளை வணங்க வேண்டாம்.'' என மாத்தறை சாந்த தோமஸ் மகளீர் பாடசாலையின் நிகழ்வொன்றில் பங்கேற்றபோது மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர்கள் மற்றும் முதியோர் தினம் இலங்கையில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு உலக சிறுவர்கள் தினத்தின் கருப்பொருள் "புன்னகைகளின் உலகம்" என்பதாகும்.

உலக சிறுவர் தினத்திற்காக அரச மற்றும் தனியார் துறை சார்ந்த பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், இலங்கைச் சிறுவர்களைப் பாதித்துள்ள தனித்துவமான விடயங்களை மையப்படுத்திய நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்தப்படவில்லை என ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

குறிப்பாகப் பள்ளிச் சிறுவர்கள் அதிக அளவில் பசியோடு இருக்கின்றனர். சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு, திரிபோஷா போன்ற சிறுவர்களின் துணை உணவுகளில் நச்சு இரசாயனங்கள் கலந்திருப்பது போன்ற கடுமையான பிரச்னைகள் குறித்து அரசு பொறுப்பான கவனம் செலுத்தவில்லை.

தனியார் துறையினர் தங்களது வணிக இலக்குகளை மையமாக வைத்து சிறுவர் தினத்தை கொண்டாடி வரும் நிலையில், சிறுவர்களைப் பாதிக்கும் அவல நிலை குறித்து பொது சமூகம் அதிக கவனம் செலுத்துவதில்லை.

அப்படி கவனம் செலுத்த வேண்டிய விஷயம் குறித்து தீவிர செயற்பாட்டு மையம் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ இது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...