Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

கொழும்பில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்த வர்த்தமானி இரத்து

T

The Leader Desk

அக்டோபர் 2, 2022 • 4:06 AM

கொழும்பில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்த வர்த்தமானி இரத்து

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதியின் கையொப்பத்துடன் இன்று (01) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அரச இரகசிய சட்டத்தின் கீழ், அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பெயரிட்டு கடந்த 23ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அதியுயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பாரிய எதிர்ப்பு கிளம்பியது.
எழுத்து அளவு:

ஜனாதிபதியின் கையொப்பத்துடன் இன்று (01) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச இரகசிய சட்டத்தின் கீழ், அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பெயரிட்டு கடந்த 23ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதி, உயர் நீதிமன்ற வளாகம், கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகம், சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலக அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, கடற்படைத் தலைமையகம், பொலிஸ் தலைமையகம், அக்குரேகொட பாதுகாப்பு அமைச்சு, இராணுவத் தலைமையகம், கொம்பனி வீதி விமானப்படைத் தலைமையகம், மல்பாரா பிரதமரின் செயலாளர் அலுவலகம், கொள்ளுப்பிட்டி கோவில் வளாகம், பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படை தளபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் ஆகியன அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதியுயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பாரிய எதிர்ப்பு கிளம்பியது.

அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பெயரிடும் வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது என்றும் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்படுவதாகவும் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக பல தரப்பினர் உயர் நீதிமன்றில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கொழும்பில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்த வர்த்தமானி இரத்து | Tamil Leader | We Lead the Nation