Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

விளையாட்டு அமைச்சை பொறுப்பேற்கவும் – நாமலிடம் கோரிக்கை!

T

The Leader Desk

செப்டம்பர் 30, 2022 • 7:48 AM

விளையாட்டு அமைச்சை பொறுப்பேற்கவும் – நாமலிடம் கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விளையாட்டு சங்க அதிகாரிகள், முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் அடங்கிய குழுவினர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்துள்ளதாக விளையாட்டுத்துறை தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • எனவே, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு நாமல் ராஜபக்ஷவிடம் அதிகாரிகள், முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • விளையாட்டுத்துறையை தன்னிச்சையாக கட்டுப்படுத்த அமைச்சு தயாராகி வருவதாகவும் சரியான திட்டமிடல் மற்றும் எதிர்கால பார்வை இன்றி இலங்கையில் விளையாட்டுகள் தற்போது வழிதவறி வருவதாகவும் முன்னாள் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் நாமல் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:
 

விளையாட்டு சங்க அதிகாரிகள், முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் அடங்கிய குழுவினர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்துள்ளதாக விளையாட்டுத்துறை தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளையாட்டுத்துறையை தன்னிச்சையாக கட்டுப்படுத்த அமைச்சு தயாராகி வருவதாகவும் சரியான திட்டமிடல் மற்றும் எதிர்கால பார்வை இன்றி இலங்கையில் விளையாட்டுகள் தற்போது வழிதவறி வருவதாகவும் முன்னாள் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் நாமல் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட திட்டம் இன்றி மேற்கொள்ளப்படும் இந்தச் செயற்பாடுகளினால் விளையாட்டுத்துறையின் எதிர்காலம் பாரிய ஆபத்தில் உள்ளதாக நாமலிடம் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு நாமல் ராஜபக்ஷவிடம் அதிகாரிகள், முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனக்கு அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்வதில் விருப்பம் இல்லை என்றும் ஆனால், தேவைப்பட்டால் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளவும் தயார் எனவும் நாமல் இங்கு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

விளையாட்டுத்துறை, துறைமுகம் உட்பட பல அமைச்சுகளின் அமைச்சர்கள் மாறப்போவதாக கடந்த வாரம் அரசியல் களத்தில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...