Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு புதிதல்ல -கமல் குணரத்ன

T

The Leader Desk

செப்டம்பர் 26, 2022 • 7:43 AM

உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு புதிதல்ல -கமல் குணரத்ன

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அத்தோடு, உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு நேற்று அறிமுகம் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • தேவை ஏற்பட்டால் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவ பாதுகாப்புப் படைகள் தயாராக உள்ளன.
  • பாதுகாப்பு அமைச்சின் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எழுத்து அளவு:
 

அத்தோடு, உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு நேற்று அறிமுகம் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “எந்த பிரச்சனையும் இல்லை. போராட்டங்கள் நடத்தலாம். கூட்டங்கள் நடத்தலாம். ஆனால் சட்ட முறைப்படி அந்த கூட்டங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்.

ஒரு கிராமத்தில்கூட ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அந்தந்த பொலிஸ் நிலையங்களில் எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும்.

அன்றாட வாழ்க்கையை துன்பகரமானதாக மாற்றும் விடயங்களை எல்லோரும் விரும்புவதில்லை. எனவே, அதையெல்லாம் பரிசீலித்து பொலிஸார் அந்த அனுமதியை வழங்குகின்றனர்.

திடீர் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை பொலிஸாருக்கு உள்ளது. தேவை ஏற்பட்டால் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவ பாதுகாப்புப் படைகள் தயாராக உள்ளன.

உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு நேற்று அறிமுகம் செய்யப்படவில்லை. காலங்காலமாக வரும் சில சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் விடயங்கள் இவை.

கடந்த காலங்களில் ஜனாதிபதி செயலகம் சுற்றிவளைக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் அங்கு தங்கள் பணிகளைச் செய்ய முடியவில்லை.

அவ்வாறான இடையூறுகள் ஏற்பட்டால் அவ்வாறான இடங்களை நாம் பாதுகாக்க வேண்டும். முந்தைய நிலை மீண்டும் ஏற்படக்கூடாது.

அதனால்தான் கொழும்பின் பெருநகரில் சில இடங்களை மட்டும் உயர் பாதுகாப்பு வலயங்களாக வர்த்தமானி உத்தரவின் மூலம் நியமித்துள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...