Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

ரணிலின் வீட்டிற்கு அருகில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை குறித்த விசாரணைக்கு சர்வதேச கோரிக்கை

T

The Leader Desk

செப்டம்பர் 26, 2022 • 4:57 AM

ரணிலின் வீட்டிற்கு அருகில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை குறித்த விசாரணைக்கு சர்வதேச கோரிக்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த பக்கச்சார்பற்ற குழுவொன்றை நியமிக்குமாறு உலகின் மிகப்பெரிய ஒலிபரப்பு தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
  • தாக்குதல் நடந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், ஊடகவியலாளர் மீதான தாக்குதல் மற்றும் ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தும் முயற்சிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதில்கள் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாக அந்த ஒன்றியத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகேவின் உத்தரவின் பேரில் கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதில் நியூஸ்பெர்ஸ்ட் ஊடகவியலாளர்கள் பலர் காயமடைந்தனர்.
எழுத்து அளவு:

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த பக்கச்சார்பற்ற குழுவொன்றை நியமிக்குமாறு உலகின் மிகப்பெரிய ஒலிபரப்பு தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை பொலிஸாரும் பாதுகாப்பு அதிகாரிகளும் எம்.டி.வி. தனியார் நிறுவன ஊடகவியலாளர்கள் மீது மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதலுக்கு உலக ஒலிபரப்பு ஒன்றியம் (World Broadcasting Unions - WBU) கண்டனம் வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், ஊடகவியலாளர் மீதான தாக்குதல் மற்றும் ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தும் முயற்சிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதில்கள் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாக அந்த ஒன்றியத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"எந்தவொரு ஊடகவியலாளரும் அல்லது அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களும் அதனுடன் தொடர்புடைய வேறு எந்த நபரும் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களால் அச்சுறுத்தப்படவோ, துன்புறுத்தப்படவோ தாக்கப்படவோ இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு WBU அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது."

ஊடகவியலாளர் மீது பொலிஸாரும் பாதுகாப்பு உத்தியோகத்தரும் அநியாயமாக தாக்குதல் நடத்தியதை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ள விடயத்தை சுட்டிக்காட்டியுள்ள உலக ஒலிபரப்பு ஒன்றியம், குறித்த ஊடகவியலாளர்கள் பொலிஸாரை அச்சுறுத்தவில்லை எனவும், இதனால் இந்த தாக்குதல் சுதந்திர ஊடக உரிமைகளை கடுமையாக மீறுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான ரோஹினி மாரசிங்க, ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டு, தாக்குதல் இடம்பெற்ற தினத்தில் பொலிஸாருக்கு ஊடகவியலாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கவில்லை என்பதில் சந்தேகமில்லை என வலியுறுத்தியுள்ளார்.

ஜூலை 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட தொடர்புடைய செய்தி அறிக்கை மற்றும் சிறிது நேரத்திற்குப் பின்னர் பிரதமரின் வீட்டை எரியூட்டியமை தொடர்பாக எம்.டி.வி அலைவரிசையின் சிரேஷ்ட நிர்வாகத்தின் பல உறுப்பினர்கள் பொலிஸுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக உலக ஒலிபரப்பு ஒன்றியம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு உத்தரவைப் பிறப்பித்து அறிக்கையிடலில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் குழுவைத் தாக்கியமைக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே நேரடிப் பொறுப்பு என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகேவின் உத்தரவின் பேரில் கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதில் நியூஸ்பெர்ஸ்ட் ஊடகவியலாளர்கள் பலர் காயமடைந்தனர்.

சரசி பீரிஸ், காளிமுத்து சந்திரன், இமேஷ் சதர்லண்ட், சானுக வீரகோன், பனிந்து லொகுருகே, வருண சம்பத், ஜூடின் சிந்துஜன் மற்றும் ஜனிதா மென்டிஸ் ஆகியோரின் பெயர்கள் சிரச ஊடக வலையமைப்பினால் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ரணிலின் வீட்டிற்கு அருகில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை குறித்த விசாரணைக்கு சர்வதேச கோரிக்கை | Tamil Leader | We Lead the Nation