Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதலாவது கலந்துரையாடல் இன்று

T

The Leader Desk

செப்டம்பர் 23, 2022 • 6:01 AM

கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதலாவது கலந்துரையாடல் இன்று

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் ஜூம் தொழில்நுட்பம் மூலம் இடம்பெறவுள்ளது.
  • பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு இலங்கைக்கு பூரண ஆதரவை வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
  • பாரிஸ் கிளப் மற்றும் 23 உறுப்பினர் அல்லாத நாடுகளின் தூதர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
எழுத்து அளவு:
 

இந்த கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் ஜூம் தொழில்நுட்பம் மூலம் இடம்பெறவுள்ளது.

சர்வதேச நிதி மற்றும் சொத்து மேலாண்மை ஆலோசனை நிறுவனமான Lazard மற்றும் அதன் சட்ட ஆலோசகர் Clifford Chance இன் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

இக்கலந்துரையாடலுக்கு முன்னதாக, கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது தொடர்பாக தூதுவர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு இலங்கைக்கு பூரண ஆதரவை வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பாரிஸ் கிளப் மற்றும் 23 உறுப்பினர் அல்லாத நாடுகளின் தூதர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...