Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

இலங்கை கடற்பிராந்தியத்தில் டைனோசர்களின் காலத்துக்கு முற்பட்ட ஜெல்லிமீன்கள் கண்டுபிடிப்பு !

T

The Leader Desk

செப்டம்பர் 21, 2022 • 1:12 PM

இலங்கை கடற்பிராந்தியத்தில் டைனோசர்களின் காலத்துக்கு முற்பட்ட ஜெல்லிமீன்கள் கண்டுபிடிப்பு !

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பூமியில் டைனோசர்களின் காலத்துக்கு முன்னர் பல மில்லியன் ஆண்டுகளாக கடல் நீரோட்டங்களில் அலைந்து திரிந்த ஜெல்லிமீன்கள் இவை என வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
  • இலங்கைக் கடற்பரப்பில் வசிப்பதாக முன்னர் அறியப்படாத குறைந்தது 10 இனங்கள் இந்த ஆய்வில் கண்டறியப்பப்பட்டுள்ளன இந்த ஆராய்ச்சியானது 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தை அடிப்படையாகக் கொண்டு “Waya jel Survey” என பெயரிடப்பட்டது.
  • அறிவியலுக்குப் புதிதாக ஒரு ஜெல்லிமீன் இனத்தைக் கண்டுபிடித்தது இதன் சிறந்த பிரதிபலனாகும்.
எழுத்து அளவு:



பூமியில் டைனோசர்களின் காலத்துக்கு முன்னர் பல மில்லியன் ஆண்டுகளாக கடல் நீரோட்டங்களில் அலைந்து திரிந்த ஜெல்லிமீன்கள் இவை என வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

தற்செயலான ஆய்வு செயற்பாடுகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் கடற்கரைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டாலும், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கையில் ஜெல்லிமீன்கள் குறித்து முறையான ஆய்வு எதுவும் நடத்தப்படவில்லை.

இலங்கையின் வட மேல் மாகாண பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு ஒன்று இந்த விஞ்ஞானப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முற்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்பரப்பில் வசிப்பதாக முன்னர் அறியப்படாத குறைந்தது 10 இனங்கள் இந்த ஆய்வில் கண்டறியப்பப்பட்டுள்ளன

இந்த ஆராய்ச்சியானது 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தை அடிப்படையாகக் கொண்டு “Waya jel Survey” என பெயரிடப்பட்டது.

அறிவியலுக்குப் புதிதாக ஒரு ஜெல்லிமீன் இனத்தைக் கண்டுபிடித்தது இதன் சிறந்த பிரதிபலனாகும். பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த ஆய்வுக்கு ‘கெரிப்டியா வயம்ப’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஜெல்லிமீன் இனம் இதுவாகும். அத்துடன் வடக்கு இந்து சமுத்திர பிராந்தியத்தில் நடத்தப்பட்ட உயிரியல் ஆய்வுகளில் கெரிப்டியா இனம் முதலாவது உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...