விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷவில் எஃப்ளொடொஸின் என்ற நச்சுப்பொருள் அடங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதுடன், பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன இன்று தெரிவித்தார்.
இதனால், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக் யார் பதில் சொல்வது, திரிபோஷ விநியோகத்தில் ஒழுங்குமுறைகள் இல்லையா என அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நாம் முழுமையான சேதன பசளை பாவனைக்கு மாறிய வேளையில் திரிபோஷ உற்பத்திக்கான மூலப்பொருளான சோளத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
இது தொடர்பில் பிரச்சினை நிலவிய அதனை நான் மறுக்கவில்லை. கர்ப்பிணிகளுக்கான திரிபோஷவுக்கான தட்டுப்பாடு நிலவியது பின்ன் யுனிசெப்பின் உதவியுடன் அது நிவர்த்திக்கப்பட்டது.
எவ்வாறாயினும், திரிபோஷவில் அப்ளொடொக்ஸின் அடங்கியுள்ளதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது என பொறுப்புடன் கூறுகிறேன்.
எந்தவித அடிப்படையும் இல்லாமல் இவ்வாறு கூறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நான் தயாராகவுள்ளேன்.
இவ்வாறானதொரு கருத்தை வெளியிடுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களின் அனுமதியை பெறுவது அவசியமாகும் என்றார்.
திரிபோஷவில் நச்சு உள்ளதாக கூறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
T
The Leader Desk
செப்டம்பர் 21, 2022 • 5:28 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷவில் எஃப்ளொடொஸின் என்ற நச்சுப்பொருள் அடங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதுடன், பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன இன்று தெரிவித்தார்.
- கர்ப்பிணிகளுக்கான திரிபோஷவுக்கான தட்டுப்பாடு நிலவியது பின்ன் யுனிசெப்பின் உதவியுடன் அது நிவர்த்திக்கப்பட்டது.
- இதனால், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக் யார் பதில் சொல்வது, திரிபோஷ விநியோகத்தில் ஒழுங்குமுறைகள் இல்லையா என அவர் கேள்வி எழுப்பினார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

