Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

குறிவைத்துத் தாக்கப்பட்ட ரஷ்ய ஜனாதிபதி புதினின் கார்; புதினுக்கு என்ன ஆனது?

T

The Leader Desk

செப்டம்பர் 17, 2022 • 1:24 AM

குறிவைத்துத் தாக்கப்பட்ட ரஷ்ய ஜனாதிபதி புதினின் கார்; புதினுக்கு என்ன ஆனது?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரஷ்ய ஜனாதிபதி புதின் உத்தரவின்பேரில் கடந்த மார்ச் 24ஆம் திகதியன்று உக்ரைனில் தொடங்கிய போரானது, முடிவு ஏதும் எட்டப்படாமல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
  • இந்த நிலையில், ஜனாதிபதி புதின் தற்போது படுகொலை முயற்சியிலிருந்து தப்பித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.
  • உக்ரைனும் தாக்குப்பிடித்து ரஷ்யாவை எதிர்கொண்டு வருகிறது.
எழுத்து அளவு:

ரஷ்ய ஜனாதிபதி புதின் உத்தரவின்பேரில் கடந்த மார்ச் 24ஆம் திகதியன்று உக்ரைனில் தொடங்கிய போரானது, முடிவு ஏதும் எட்டப்படாமல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைனும் தாக்குப்பிடித்து ரஷ்யாவை எதிர்கொண்டு வருகிறது. இதற்கிடையில், ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு ஏதோ ஆகிவிட்டது, தற்போது வெளியில் நடமாடுவது புதினே அல்ல... அவரைப்போன்ற மாற்று உருவம் கொண்ட வேறொருவர் தான் உலவி கொண்டிருக்கிறார்" என பேசப்பட்டது.

இந்த பரபரப்புக்கு மத்தியில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புதினின் மூளை என்றழைக்கப்பட்டவரின் மகள், கார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். மேலும், அது புதினின் மூளை என்றழைக்கப்பட்டவருக்கு வைத்த குறிதான் என்றும் கூறப்பட்டு வந்தது. அதேசமயம், இதில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லையென உக்ரைனும் தெரிவித்துவந்தது. இந்த நிலையில், ஜனாதிபதி புதின் தற்போது படுகொலை முயற்சியிலிருந்து தப்பித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.

இது குறித்து ரஷ்ய டெலிகிராம் ஊடகத்தில் வெளியான செய்தியில், புதின் தன்னுடைய இல்லத்திலிருந்து வாகன அணிவகுப்புடன் திரும்பியபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் என்றைக்கு இது நடந்தது எனத் திகதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் இந்தத் தாக்குதலில் புதின் சென்ற லிமோசின் காரின் இடது முன் சக்கரம் தாக்குதலுக்குள்ளானதாகவும், புதின் காரிலிருந்து புகை வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இருப்பினும் புதினுக்கு ஏதும் ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், கார் அணிவிப்பகுப்பில் முதல் காரிலிருந்த மூன்று பேர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதோடு, ஜனாதிபதியின் பாதுகாப்பு சேவை தலைவர் உட்பட பல அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுக் சிறைக் காவலில் இருப்பதாக மற்றொரு ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...