Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

கைதிகளை சந்திக்க வரும் தமிழ் பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக புகார்

T

The Leader Desk

செப்டம்பர் 16, 2022 • 3:34 AM

கைதிகளை சந்திக்க வரும் தமிழ் பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக புகார்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழ் அரசியல் கைதிகளை பார்ப்பதற்காக வடக்கில் இருந்து கொழும்புக்கு வந்த பெண்களை இன ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
  • ஆனால் அதிகாரிகள், இது எங்களுடைய சிங்கள நாடு, நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று சிங்களத்தில் கூறியுள்ளார்கள்.
  • செப்டெம்பர் 12ஆம் திகதி தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு பல வருடங்களாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட வடக்கில் இருந்து அவர்களது குடும்ப உறவினர்கள் கொழும்பு வந்திருந்தனர்.
எழுத்து அளவு:


தமிழ் அரசியல் கைதிகளை பார்ப்பதற்காக வடக்கில் இருந்து கொழும்புக்கு வந்த பெண்களை இன ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கேலிசெய்யப்பட்டும், இனவாதமாகவும், வன்முறையாகவும், பாரபட்சமாகவும் நடத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வவுனியாவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போது தெரிவித்தார்.

“பெண்கள் மிகவும் மோசமாக சோதிக்கப்படுகிறார்கள். தகாத வார்த்தைகள் பேசப்பட்டுள்ளன. தேவதாசனை சிறையில் சந்தித்த அவரது மகள் கடுமையான சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள், இது எங்களுடைய சிங்கள நாடு, நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று சிங்களத்தில் கூறியுள்ளார்கள்.

சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளின் இந்த நடத்தைக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

செப்டெம்பர் 12ஆம் திகதி தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு பல வருடங்களாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட வடக்கில் இருந்து அவர்களது குடும்ப உறவினர்கள் கொழும்பு வந்திருந்தனர்.

இந்த பெண்களுக்கு எதிராக சிறையில் நிகழ்ந்த துஷ்பிரயோகம் குறித்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கமும் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

“இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, சிறை அதிகாரிகளுக்கு சட்டம் மட்டுமின்றி, சீருடை, கையில் ஆயுதம் என்பதை தாண்டி ஒழுக்கம், மனித உறவுகள், மனித கண்ணியம் போன்றவற்றிலும் பயிற்சி அளிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கைதிகளை சந்திக்க வரும் தமிழ் பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக புகார் | Tamil Leader | We Lead the Nation