Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

முஸ்லிம்களின் பிரச்சினைகளை உள்வாங்குமாறு ஐ.நா.வில் மகஜர் கையளிப்பு

T

The Leader Desk

செப்டம்பர் 15, 2022 • 1:06 PM

முஸ்லிம்களின் பிரச்சினைகளை உள்வாங்குமாறு ஐ.நா.வில் மகஜர் கையளிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மறக்கப்பட்ட சமூகமாக இருக்கும் வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்க்க கூட்டத்தொடரில் கவனம் செலுத்தி, இறுதி அறிக்கையில் உள்வாங்கி, சர்வதேசத்தின் கவனத்தை தமது பக்கமும் திருப்ப வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

ஜெனிவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 51 ஆவது கூட்டத்தொடரில், அதன் இறுதித் தீர்மான அறிக்கையில் இலங்கையின் வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகளின் செயலாளருக்கு பெயரிடப்பட்டு, ஐக்கிய நாடுகளின் யாழ்ப்பாண பிரதிநிதியிடம்  இந்த மகஜர்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளர் அஷ்ஷெய்க் P.A.S.சுஃப்யான் மற்றும் அமைப்பாளர் A.C.M.கலீல் ஆகியோரால் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. 

ஐ.நா செயலாளர் நாயகம் இலங்கை தொடர்பில் காட்டமான அறிக்கையை வௌியிட்டு, அதில் பல்வேறு விடயங்களை குறிப்பிட்டிருந்தமையை வரவேற்பதாகவும் குறித்த மகஜரில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

முஸ்லிம்கள் வட மாகாணத்தில்  இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்து இன்று வரை சரியான  தீர்வுகள் மற்றும் மறுவாழ்வு இன்றி அவதியுற்று வருவது கவலைக்குரியது என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறக்கப்பட்ட சமூகமாக இருக்கும் வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்க்க கூட்டத்தொடரில் கவனம் செலுத்தி, இறுதி அறிக்கையில் உள்வாங்கி, சர்வதேசத்தின் கவனத்தை தமது பக்கமும் திருப்ப வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...