Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

ராஜபக்ஸ குடும்ப ஆட்சி தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அமெரிக்கா கோரிக்கை

T

The Leader Desk

செப்டம்பர் 15, 2022 • 1:02 PM

ராஜபக்ஸ குடும்ப ஆட்சி தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அமெரிக்கா கோரிக்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ராஜபக்ஸ குடும்பத்தின் மோசமான ஆட்சி மற்றும் பொருளாதார கொள்கைகள் தொடர்பான சவால்கள் உட்பட இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண விரிவான சர்வதேச அணுகுமுறையைக் கோரும் பிரேரணை அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
  • இந்த பிரேரணையை அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக் குழுவின் தலைவர் உள்ளிட்ட நான்கு செனட்டர்கள் முன்வைத்துள்ளனர்.
எழுத்து அளவு:

ராஜபக்ஸ குடும்பத்தின் மோசமான ஆட்சி மற்றும் பொருளாதார கொள்கைகள் தொடர்பான சவால்கள் உட்பட இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண விரிவான சர்வதேச அணுகுமுறையைக் கோரும் பிரேரணை அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணையை அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக் குழுவின் தலைவர் உள்ளிட்ட நான்கு செனட்டர்கள் முன்வைத்துள்ளனர். ராஜபக்ஸவின் ஆட்சி மிகவும் ஊழலான குடும்ப ஆட்சி என்பதுடன், வெளிப்படைத்தன்மையற்றது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

அந்த ஆட்சியில், மனித உரிமை ஆர்வலர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் பணிகளை சவாலுக்கு உட்படுத்துவோரை அச்சுறுத்தும் நடவடிக்கைகள்  2020 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டதாக செனட்டர்கள் தமது பிரேரணையில் குறிப்பிட்டுள்ளனர்.

ராஜபக்ஸ குடும்ப ஆட்சியில் விவசாயம் தொடர்பான தவறான கொள்கைகளை நடைமுறைப்படுத்தியமை,  நீடித்து நிலைக்க முடியாத மாபெரும் திட்டங்களுக்காக சீனாவிடம் பில்லியன் கணக்கான டொலர்களை கடனாகப் பெற்றமை, பொது வளங்களை தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தியமை என்பனவும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

மோசடி மற்றும் ஊழல் தொடர்பான வெளிப்படையான, பொறுப்பான விசாரணைகளை நடத்துவது உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகம் பரிசீலிக்கத் தவறிவிட்டதாக நான்கு அமெரிக்க செனட்டர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

அமைதியான அரசியல் போராட்டங்களை நசுக்குவதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தி, இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பிரேரணைகளுக்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க செனட் சபையிடம் செனட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...