Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

20 வேட்பாளர்கள் தமக்கு பாதுகாப்பு வேண்டாம் என தெரிவிப்பு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 24, 2024 • 7:56 AM

20 வேட்பாளர்கள்  தமக்கு பாதுகாப்பு  வேண்டாம் என தெரிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போட்டியிடும் சுமார் இருபது வேட்பாளர்கள் தமக்கு பாதுகாவலர்கள் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
  • ஜனாதிபதி வேட்பாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட்டது.
  • ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான வேட்பாளர்கள் சிறிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
எழுத்து அளவு:

போட்டியிடும் சுமார் இருபது வேட்பாளர்கள் தமக்கு பாதுகாவலர்கள் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான வேட்பாளர்கள் சிறிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

பாதுகாப்பு கோரிய ஏனைய வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட்டது.

அந்த விசாரணையில் தெரியவந்த தகவலின் அடிப்படையில் இந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்கவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.

ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிடம் நாம் வினவிய போது, ​​ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்கேற்கும் கூட்டங்களின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

20 வேட்பாளர்கள் தமக்கு பாதுகாப்பு வேண்டாம் என தெரிவிப்பு! | Tamil Leader | We Lead the Nation