இருந்து பெறப்பட்ட சிம்களை முறைகேடாகப் பயன்படுத்தி பணக்கார வர்த்தகர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து 2 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
வங்கிக் கணக்குகளிலிருந்து 2 கோடி ரூபா மோசடி: ஹட்டனைச் சேர்ந்தவர் கைது!
T
The Leader Desk
ஜூன் 21, 2024 • 9:10 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இருந்து பெறப்பட்ட சிம்களை முறைகேடாகப் பயன்படுத்தி பணக்கார வர்த்தகர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து 2 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
- சந்தேக நபரை நேற்று (20) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கையில் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் தொலைபேசி நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
- இவரிடமிருந்து தொலைபேசி பழுதுபார்த்தல், சிம்களைக் கொள்வனவு செய்தல் போன்ற பல சேவைகளை வர்த்தகர்கள் உட்பட பலர் பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
- வர்த்தகர்களின் சிம் தரவுகளை சூட்சுமமாக பெற்ற சந்தேக நபர் அந்த வர்த்தகர்களின் வங்கிக் கணக்குகளுக்கு இரகசியமாக பிரவேசித்து அந்த கணக்குகளில் இருந்து 210 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகளால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
எழுத்து அளவு:
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் தொலைபேசி விற்பனை பிரதிநிதி ஒருவரே கணினிகள் கண்காணிப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நேற்று (20) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கையில் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் தொலைபேசி நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இவரிடமிருந்து தொலைபேசி பழுதுபார்த்தல், சிம்களைக் கொள்வனவு செய்தல் போன்ற பல சேவைகளை வர்த்தகர்கள் உட்பட பலர் பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
வர்த்தகர்களின் சிம் தரவுகளை சூட்சுமமாக பெற்ற சந்தேக நபர் அந்த வர்த்தகர்களின் வங்கிக் கணக்குகளுக்கு இரகசியமாக பிரவேசித்து அந்த கணக்குகளில் இருந்து 210 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகளால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான மோசடி சம்பவம் தொடர்பில் சந்தேக நபருக்கு எதிராக எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அவரை எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த விசாரணை அதிகாரிகள் அனுமதி கோரினர்.
இதனையடுத்து சந்தேக நபரை ஜூலை 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

