Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

அசாத் சாலியின் மனு மீதான விசாரணை செப்டம்பர் 2 இல்!

T

The Leader Desk

ஜூன் 18, 2024 • 11:48 AM

அசாத் சாலியின் மனு மீதான விசாரணை  செப்டம்பர் 2 இல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திணைக்களம் தம்மைக் கைது செய்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்ததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளது என தீர்ப்பளிக்குமாறு மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உயர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.
  • எதிர்காலத்தில் இவ்வாறான துஷ்பிரயோகங்கள் இடம்பெறாமல் தடுக்கும் வகையில் இந்த மனு மீதான விசாரணைக்கான திகதியை நிர்ணயிக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.
  • அதன்படி, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 2ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
எழுத்து அளவு:

திணைக்களம் தம்மைக் கைது செய்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்ததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளது என தீர்ப்பளிக்குமாறு மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உயர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.

இந்த மனு எஸ். துரை ராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது மனுதாரர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆஜராகியிருந்தார்.

எதிர்காலத்தில் இவ்வாறான துஷ்பிரயோகங்கள் இடம்பெறாமல் தடுக்கும் வகையில் இந்த மனு மீதான விசாரணைக்கான திகதியை நிர்ணயிக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.

அதன்படி, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 2ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

2020ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு களங்கம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்..

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...