சில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ச அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ச அவர்களின் மனைவியின் தந்தை (Father in law)  திலக் வீரசிங்க அவர்களும்  இளைய புதல்வரான யோசித்த ராஜபக்ச அவர்களின் மனைவியின் தாய் (Mother in law) டைட்ரேடி லிவேரா அவர்களும் அரச நிறுவனமான Airport and Aviation (Services) Sri Lanka Limited நிறுவனத்தின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர் .

விமான நிலையங்கள், மற்றும் அதன் ஒழுங்குமுறைகள் பற்றிய அறிவு (aviation regulatory knowledge), விமானச் சட்டங்கள் பற்றிய தெளிவு (aviation laws), தீவிர நிர்வாக திறன்கள் (serious managerial skills) என்பன பற்றிய தெளிவுள்ளவர்கள் மட்டுமே Airport and Aviation (Services) Sri Lanka Limited நிறுவன இயக்குனர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்கிற  நியதிக்கு  மாறாக  அரசியல் பின்புலத்திடன் குறித்த  நியமனங்கள்  மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

இந்நிலையில் இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள  ‘நிதி மேலாண்மை அறிக்கையின் படி (Fiscal Management Report 2020–21) , Airport and Aviation (Services) Sri Lanka Limited நிறுவனம் கடந்த 8 மாதங்களில் மட்டும் 688 மில்லியன் ரூபா நட்டமடைந்து இருக்கிறது .

இப்போது மகிந்த ராஜபக்ச அவர்களின் மற்றுமொரு மகனான யோசித ராஜபக்ச அவர்களின் மனைவியின் தந்தையாரான  (Father in law) ஜெரம் ஜயரத்ன அவர்கள்  மேற்கிந்திய நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ள  இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட  இருக்கிறார் .

22 முதல் தர போட்டிகளின் பங்கு பற்றியுள்ள  ஜெரம் ஜயரத்ன அவர்கள் இலங்கை A அணி சார்பாக வெறும் மூன்று போட்டிகளில் பங்கு பற்றி இருக்கிறார். இந்த 3 போட்டிகளிலும் மொத்தமாக 27 ஓட்டங்களை பெற்ற ஜெரம் ஜயரத்ன அவர்கள் 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கிறார் .

Jerome Jayarathne appointed as COO of SLC 5095f97b fc09 487e bc34 03367932e956

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி