சுற்றுச்சூழல் ஆர்வலறும் ஊடகவியலாளறுமான லக்மல் ரனபாஹு சிங்கராஜ வனப்பகுதிக்கு  குறுக்காக சாலை அமைப்பதற்கு எதிராக குரல் எழுப்பி வந்த நிலையில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலை சுற்றுச்சூழல் அமைப்பு வண்மையாக கண்டிக்கிறது.

சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர காரியவசம் கூறுகையில், உலக பாரம்பரிய வனப்பகுதியான சிங்கராஜவைச் சுற்றியுள்ள நில அபகரிப்புக்கு எதிராக லக்மல் ரணபாஹு தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக அழுத்தம் கொடுத்து வந்தார்.

கலவான பிரதேச செயலாளர் சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் பேரழிவு குறித்து விசாரித்த பின்னர், பிரதேச செயலாளரின் கணவரும், கலவான பகுதியில் உள்ள அவரது நண்பர்கள் குழுவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 24) இந்த தாக்குதலை நடத்தியதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் குற்றம் சாட்டியுள்ளார். 

தக்குதலுக்குள்ளாக்கப்பட்ட  லக்மல் ரனபாஹு அறுவை சிகிச்சை செய்துள்ளதாக சமூக ஊடகங்கள் மூலம் அறியக் கிடைக்கின்றது.

கலவான பிரதேச செயலாளர் சட்டத்தை வளைத்து அரசியல் சக்தியைப் பயன்படுத்த தயாராகி வருவதாக அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார். லக்மல் ரனபாஹு முன்னிலை சோசலிஸ கட்சியின் முன்னாள் விவர  இணைய தளத்தின் செய்தியாலறுமாவார்.

142446405 10221974179636249 3182439408740119572 n

LakmalR

140172381 10225179356056806 4597601077684941157 n

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி